பரமா.., படிடா.., தனது பெயரை எழுத தெரியாமல் திணறிய ஜோவிகா – மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!

0
பரமா.., படிடா.., தனது பெயரை எழுத தெரியாமல் திணறிய ஜோவிகா - மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!

சர்ச்சைக்கு பெயர் போன நடிகை வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா தற்போது பிக்பாஸ் சீசன் 7ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் உள்ளே நுழைந்த ஒரு வாரத்தில் அவரின் படிப்பை வைத்து பெரிய பிரளயமே வெடித்தது. அதாவது ஜோவிகாவுக்கு தமிழ் சரியாக பேசவோ, எழுதவோ தெரியவில்லை என்று விசித்திரா சுட்டி காட்டிய போது இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது கூட இந்த பிரச்சனையை கமல் சார் தான் முடித்து வைத்தார்.

அதன்பிறகு படிப்பை பற்றி எந்த போட்டியாளரும் பேசுவதில்லை. இதையடுத்து கொஞ்சம் நாட்கள் கழித்து பிக்பாஸ் அழைத்து பொருட்களை படிக்க சொன்ன போது படிக்க முடியாமல் திணறினார். இதை மக்கள் ட்ரோல் செய்து கலாய்த்து வந்தனர். இந்நிலையில் மீண்டும் ஜோவிகா நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளார். அதாவது போர்டில் தனது பெயரை ஜோவிகா என்று எழுதுவதற்குப் பதிலாக ஜேபவிகா என்று எழுதியுள்ளார். தற்போது இதனை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து மீம்ஸ் வெளியீட்டு வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here