யோகிபாபுவின் “மலை” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..,கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0
யோகிபாபுவின்
யோகிபாபுவின் "மலை" பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..,கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

தமிழ்த்திரையுலகில் காமெடியில் பிச்சு உதறும் நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் தான் நடிகர் யோகிபாபு. தற்போது இவர் நடிப்பில் தாதா, ஜெயிலர், வாரிசு போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவரின் கால் சீட் கிடைக்காமல் சில இயக்குனர்கள் கவலைப்பட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு யோகிபாபு படு பிசியாக நடித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் தற்போது அடுத்த நடிக்க இருக்கும் புதிய படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது லெமன் லீப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஐ.பி. முருகேஷ் படைப்பில் நடிகர் யோகிபாபு நடித்து வரும் திரைப்படம் தான் மலை. அது போக இந்த படத்தில் நடிகை லட்சுமி மேனன் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

மீண்டும் புது சீரியலில் கமிட்டான நாம் இருவர் நமக்கு இருவர் நடிகை!!

மேலும் நடிகர் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய டி இமான் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டதால், நடிகர் யோகி பாபு கேரக்டர் மிக அழுத்தமாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here