கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் கொரோனா – பெற்றோர்கள் அச்சம்!!

0
பள்ளி கல்லூரிகளுக்கு காவல்துறை அறிவித்த தடை உத்தரவு - மாநிலத்தில் தொடரும் பதற்றம்!!
பள்ளி கல்லூரிகளுக்கு காவல்துறை அறிவித்த தடை உத்தரவு - மாநிலத்தில் தொடரும் பதற்றம்!!

தற்போது இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் மதுரையில் முதலாம் ஆண்டு படிக்கும் மருத்துவ கல்லூரி மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

மாணவர்களை தாக்கும் கொரோனா:

கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவின் வேகம் குறைந்து வரும் நிலையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதில் ஒன்று தான் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்பது. கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி முதல் இறுதி ஆண்டிற்கான மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் சென்னை ஐஐடியில் படித்து வரும் 4 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யபட்டதை அடுத்து அங்குள்ள மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை நடந்தது. அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. மொத்தம் 191 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்தனர். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் கொரோனா தடுப்பு நடவடிக்கை அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய முதல்வர்!!

தற்போது அதேபோல் மதுரையில் மருத்துவ கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவன் விடுதியில் தங்கிருப்பதால் அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் கொரோனா மீண்டும் மாணவர்கள் மூலம் பரவ தொடங்கியுள்ளது??என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here