“நான் ஏமாந்த மாதிரி, யாரும் ஏமாறக் கூடாது”- ஷகிலா உருக்கமான பேட்டி!!

0

1980 களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை பற்றி படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் அந்த படத்தை பற்றி அளித்த பெட்டியில் ‘நான் ஏமாந்ததை போல எந்த பெண்ணும் ஏமாற கூடாது, அதற்காக எடுக்கப்பட்ட படம் தான்’ இது என்று கூறியுள்ளார்.

ஷகிலா

தமிழ், தெலுங்கு மாற்று மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. பல கவர்ச்சி படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைத்தது. முன்னணி நடிகர்களையே ஓரங்கட்டும் அளவிற்கு இவரின் படங்கள் ஹிட் அடித்தது. தமிழில் முதன்முதலில் இவர் கவுண்டமணியுடன் நடித்த அந்த காமெடி காட்சிகள் இன்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தான் பெற்று வருகிறது.

1980 இல் இவரின் படம் தான் டாப் ஹிட். இவரின் போஸ்டர் இல்லாத இடமே இருக்காது. இவர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். குறிப்பிட்ட நாட்கள் வரை உள்ளே இருந்த ஷகிலா கையை அறுத்துக் கொள்வதாக மிரட்டி தான் வெளியே வந்தார். எதுவானாலும் நேர்பட பேசி விடும் பண்பும் ஷகிலாவிற்கு அதிகம் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சில தினங்களுக்கு முன்பு கூட அவர் வனிதாவிடம் பேட்டி அளித்திருந்தார். பிக் பாஸ் பற்றி இருவரும் கலந்தாலோசித்தனர். அப்பொழுது தான் ஷகிலா தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவத்தை பகிர்ந்தார். பிரேக்கப், மேக்கப் என்று கலாய்க்கவும் செய்தார். அதன் பிறகு இப்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வருகிறார். எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் எல்லாரிடமும் ஒரே மாதிரியாக பழகும் ஷகிலாவை பார்க்க முடிந்தது.

இப்பொழுது ஷகிலாவின் வாழ்க்கை கதையை வைத்து ஒரு படத்தை உருவாக்கியுள்ளனர். அது வரும் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகவுள்ளது. அதனை பற்றி பேட்டியளித்துள்ளார் ஷகிலா. அவர் கூறியதாவது, என்னை பற்றி என்ன பேசினாலும் அதனை நான் காதில் வாங்க மாட்டேன். ஏனென்றால் அவர்களுக்கு என் எதிரே பேச தைரியம் இல்லை. நான் என் வாழ்க்கையில் செய்த தவறை இனி எந்த நடிகையும், வேலைக்கு செல்லும் பெண்களும் செய்துவிட கூடாது என்ற கருத்தை தான் இந்த படத்தின் மூலம் சொல்கிறேன். இந்த கருத்து அனைவரிடமும் பரவினால் போதும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here