டிச. 2 முதல் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறப்பு – தமிழக அரசு அறிவிப்பு!!

0
college students
தமிழக மாணவர்களின் இந்த நிலைமைக்கு எப்போ தான் முடிவு? பொது மக்கள் மத்தியில் வலுக்கும் கோரிக்கை!!

தமிழகத்தில் நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், டிசம்பர் 4ம் தேதி முதல் ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வகுப்புகள் தொடங்குவது குறித்த விபரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன.

கல்லூரிகள் திறப்பு:

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். மேலும் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டன. இறுதிப்பருவம் தவிர்த்து பிற மாணவர்களுக்கு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியது தொடர்பான வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தமிழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு (PhD) வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் பிற வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும், டிசம்பர் 2ம் தேதி முதல் முதுநிலை இறுதியாண்டு அறிவியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here