இந்தியாவில் 200 கோடியை தாண்டிய தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை – சுகாதாரத்துறை ரிப்போர்ட்!!

0
இந்தியாவில் 200 கோடியை தாண்டிய தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை - சுகாதாரத்துறை ரிப்போர்ட்!!
இந்தியாவில் 200 கோடியை தாண்டிய தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை - சுகாதாரத்துறை ரிப்போர்ட்!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இதுவரை செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவின் கோர தாண்டவத்தில் இருந்து மீண்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அதை தடுப்பதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகள் எடுத்து கொண்டு வருகின்றனர். குறிப்பாக கொரோனா தடுப்பூசி ஒவ்வொரு மக்களும் செலுத்தி கொண்டு வருகின்றனர். நேற்று மட்டும் கிட்டத்தட்ட 5000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து இந்தியாவில் தற்போது வரை சுமார் 217.41 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி 4 கோடி 9 லட்சத்து 22 ஆயிரத்து 85 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதே போல் இரண்டாவது டோஸ் தடுப்பூசி 3 கோடி 14 லட்சத்து 91 ஆயிரத்து 154 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் அமல்? வாக்குறுதி கொடுத்த ஸ்டாலின்! நிறைவேற்றுவாரா?

அந்த வகையில் 12 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி தடுப்பூசி 56 கோடி 11 லட்சத்து 63 ஆயிரத்து 416 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி 51 கோடி 53 லட்சத்து 34 ஆயிரத்து 360 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நேற்று ஒரு நாள் மட்டும் 3,03,888 மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here