BIG BOSS 6: இந்த ஸ்டார் வர்றாராம்., ஓவியாவுக்கு அப்புறம் இவருக்கு தான்பா ஆர்மி! மாஸ் அப்டேட்!!

0
BIG BOSS 6: இந்த ஸ்டார் வர்றாராம்., ஓவியாவுக்கு அப்புறம் இவருக்கு தான்பா ஆர்மி! மாஸ் அப்டேட்!!

விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில், விஜய் டிவி ஸ்டார் தன் இழந்த பெருமையை மீட்க பிக் பாஸ் வீட்டுக்குள் களமிறங்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.

லேட்டஸ்ட் அப்டேட்:

விஜய் டிவியில், நம்பர் ஒன் ரியாலிட்டி நிகழ்ச்சி என பிக் பாஸ் 6 அடுத்த வாரத்திற்குள் தொடங்க உள்ளது. இதற்கான தேதி அறிவிப்பை, இன்னும் விஜய் டிவி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, உள்ள போட்டியாளர்களின் உத்தேச பட்டியல் தொடர்ந்து வைரலாகி வருகிறது. அந்த வகையில் லேட்டஸ்ட் அப்டேடாக, குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் குமார் இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இவர், தன் முதல் பட ஆடியோ லாஞ்சில்  சர்ச்சைக்குரிய வகையில் பேசி தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார். 40 இயக்குனர்கள் கதையைக் கேட்டு தூங்கியதால், இவரை “ஸ்லீப்பிங் ஸ்டார் ” என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதுவரை இவர் எவ்வளவோ இதற்கு விளக்கம் முறை சொல்லியும், நெட்டிசன்கள் இவரை விட்ட பாடில்லை.

அறிவுகெட்டவன்.. என்ன இப்படி திட்றாரு.. தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனரை கண்டபடி பேசிய அஸ்வின்!

இதனால் இவருக்கான சப்போர்ட் என்பது, கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. இதனை கருத்தில் கொண்டு அஸ்வின், தனது இழந்த பெருமையை மீட்க பிக் பாஸ் வீட்டுக்குள் களமிறங்க போவதாக தகவல் கிடைத்துள்ளது. இதை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள், நீங்க தைரியமா போங்க? உங்களுக்கு நாங்க இருக்கோம் என இப்போதே ஆர்மி அமைக்கும் பணியில் ஈடுபட தொடங்கி விட்டனர்.

ஓவியாவுக்கு அப்புறம், நம்ம ஸ்லீப்பிங் ஸ்டார் அஸ்வினுக்கு  தான் இவ்வளவு பெரிய ஆர்மி இருக்கும் என பிக் பாஸ் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் அஸ்வின் கலந்து கொள்கிறாரா? இல்லையா என்று என இந்த வதந்திக்கு தற்காலிகமாக நெட்டிசன்கள் முற்று புள்ளி வைத்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here