பிக் பாஸில் களமிறங்கும் அஜித் பட நாயகி – குதூகலத்தில் தல ரசிகர்கள்!!

0
bigg boss
bigg boss

கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்த வருட பிக் பாஸ் சீசன் – 4 இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. அதற்கான ப்ரோமோக்களையும் விஜய் டிவி வெளியிட்டது. மேலும் இதில் பங்கு பெரும் போட்டியாளர்களின் பெயரும் நாளுக்கு நாள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் அஜித் படத்தின் நாயகியின் பெயர் அடிபட்டுள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸ் சீசன் 4கான எதிர்பார்ப்பு தற்போது மக்களிடையே அதிகரித்து வருகிறது. மேலும் சமூக வலைதளங்களிலும் பிக் பாஸ் பற்றிய செய்தி நாள் தோறும் வெளியான வண்ணம் உள்ளன. விஜயின்  பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் இதில் கலந்து கொள்வதாக பலர் கூறிவந்தனர். ஆனால் அவரோ தனக்கு  பிக் பாஸில் கலந்துகொள்ள விருப்பமில்லை என பகிரங்கமாக தெரிவித்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

amritha
amritha

காதலில் விழுந்தேன் படத்தில்  அறிமுகமான சுனைனா பட வாய்ப்புகள் இல்லாததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகின. ஆனால் சுனைனா தனது ட்விட்டர் பக்கத்தில் தான் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தால் படங்களில் யார் நடிப்பது என பதிவு வெளியிட்டார்.

Sunaina
Sunaina

இருந்தபோதிலும் நாள்தோறும் பிக் பாஸ் போட்டியாளர்களின் பெயர் வெளியாகிக் கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் தற்போது 2001 ஆம் ஆண்டு வெளியான சிட்டிசன் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த பிரபல பாடகியான வசுந்தரா தாஸ் இந்த பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

citizen

வசுந்தரா தாஸ் தமிழில் சிட்டிசன் படத்தில் மட்டுமே நடித்தவர். அப்படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார். பிக் பாஸ் சீசன் 4 இல் அவர்கள் கலந்துகொள்வதை அறிந்த அஜித் ரசிகர்கள் அவருக்கு ஆர்மி தொடங்க உள்ளனராம். இந்த சீசன் களைகட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here