மார்ச் மாதத்தில் தொடக்க இருக்கும் சியான் 61 பட ஷூட்டிங் – இயக்குனர் பா.ரஞ்சித் அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0

சியான் விக்ரம் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ள நிலையில் படத்தின் ஷூட்டிங் எப்பொழுது ஆரம்பிக்கும் என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.

சியான் 61:

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். கடாரம் கொண்டான் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் மகான் படத்தில் விக்ரம் மற்றும் அவரின் மகன் துருவுடன் இணைந்து நடித்து முடித்து அதன் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், அஜய் ஞானமுத்துவின் கோப்ரா மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு வரிசையாக காத்திருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சர்பேட்டா பரம்பரை படம் வெற்றி பெற்று விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் நடிகர் விக்ரமுடன் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இயக்குனரின் முந்தைய படைப்புகளைப் போலவே, இந்த திரைப்படமும் அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கே.இ ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 மார்ச் மாதத்தில் துவங்க உள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here