சீனா படைத்த புதிய சாதனை – செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கிய தியான்வென்-1 விண்கலம்!!!

0
சீனா படைத்த புதிய சாதனை - செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கிய தியான்வென்-1 விண்கலம்!!!
சீனா படைத்த புதிய சாதனை - செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கிய தியான்வென்-1 விண்கலம்!!!
சீனா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய தியான்வென்-1 ரோவர் விண்கலம், வெற்றிகரமாக செவ்வாய்கிரகத்தில் தரையிறங்கி மிகப்பெரிய விண்வெளி சாதனையை படைத்துள்ளது . செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்புக் குறித்து இந்த தியான்வென்-1விண்கலம் ஆய்வு செய்து புகைப்படங்களை , பூமிக்கு இந்த விண்கலம் அனுப்ப  உள்ளது. இந்த செய்தியை சீனா அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது.
இந்த தியான்வென்-1 விண்கலமானது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. 6 சக்கரங்களைக் கொண்ட ரோவர் கருவியுடன்  கூடிய இந்த விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ ஆகும். ஏற்கனவே சீனா விண்வெளிக்கு  வீரர்களை அனுப்பியுள்ளது. அதே போல நிலவை ஆய்வு செய்வதற்கு விண்கலங்களை அனுப்பியும் சாதனை படைத்துள்ளது.
சீனா படைத்த புதிய சாதனை - செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கிய தியான்வென்-1 விண்கலம்!!!
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கிய தியான்வென்-1 விண்கலம்!!!
முதன்முதலாக அமெரிக்கா 1976ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9 முறை செவ்வாய்கிரகத்தில் தனது விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கி உள்ளது. 1971ல் சோவியத் யூனியனின் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிரக்கப்பட்டது . தற்போது  சீன விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது, அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியில் முதல் சாதனைப் படி என்று வரவேற்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here