பிரதமருக்கு தமிழக முதல்வர் கொடுத்த அன்பு பரிசு – 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்த சந்திப்பு!!

0

தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்து தொடர்ந்து பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களுக்கு தொண்டு செய்து வருகிறது மு க ஸ்டாலின் தலைமையில் இயங்கும் திமுக அரசு. தற்போது இன்று மாலை 4 மணியளவில் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து உள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரு நினைவு பரிசினை அளித்திருக்கிறார்.

இதில் உடலுக்கு நன்மை சேர்க்கும் விதமாக பல தானியங்களை கொண்ட பெட்டகத்தை பரிசளித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பு 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து நடந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இந்த திடீர் சந்திப்பில் தமிழகத்தில் நிலுவையில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளார். குறிப்பாக நீட் தேர்வு விலக்கு, காவேரி தண்ணீர் பிரச்சனை, நதி நீர் இணைப்பு மற்றும் மீன்வர்களுக்கான தேசிய ஆணையம், கட்ச தீவு மீட்பு மற்றும் மின்சார துறை பிரச்சனை என பல கோரிக்கைகளை பிரதமரிடம் விடுத்துள்ளார். மேலும் சென்னை விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் மதுரையில் உருவாக இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக ஆலோசனை நடந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here