‘ஒரு லட்சம் கொடுத்தால் இரண்டு லட்சம் கிடைக்கும்’ – நூதன முறையில் திருடிய நிறுவனம்!!

0

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தொடர்ந்து கொலை, கொள்ளை, பாலியல் போன்ற தவறுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக பல சட்டங்கள் அரசாங்கம் கொண்டு வந்தாலும் தவறுகள் குறைந்தபாடு இல்லை. மேலும் சில திருடர்கள் நூதன முறையில் திருடி மக்களின் பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.

இந்நிலையில் சேலத்தை சேர்ந்த பால சுப்பிரமணியன் என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் ஒரு லட்சம் செலுத்தினால் ஆண்டு முடிவில் இரண்டு லட்சம் திருப்பி தரப்படும் என்று கூறி முதலீட்டார்களிடம் பணத்தை வாங்கி மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து நிறுவனத்தின் நிறுவனரை முதலீட்டார்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, சேலத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் இதற்கு முன்பு வேலூர் கிளையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தை நம்பி கிட்டத்தட்ட 40 கோடிக்கு மேல் முதலீட்டார்கள் பணத்தை கொடுத்துள்ளனர். அவர்கள் பணத்தை கொடுத்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் பணத்தை திருப்பி தராமல் பாலசுப்ரமணியம் மோசடி செய்து வந்துள்ளார்.

அவர் சேலத்தில் இருப்பதாய் அறிந்த முதலீட்டார்கள் அவரை அடித்து உதைத்து உள்ளனர், மேலும் அவர் அடியாட்கள் வைத்து தப்பியுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here