ஈஸியான & சூடான “சிக்கன் ரோல்” ரெசிபி – வீட்ல செஞ்சு அசத்துங்க!!

0

சிக்கன் என்றாலே அனைவருக்குமே மிகவும் பிடித்த ஒரு உணவு பொருள். இதனை வேண்டாம் என்று சொல்பவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இதில் ஈஸியாக அதே சமயம் வெறும் 15 நிமிடங்களில் செய்ய கூடிய ஒரு ரெசிபி தான், “சிக்கன் ரோல்” எப்படி செய்வது என்று பார்ப்போம்..!!

தேவையான பொருட்கள்

  • சப்பாத்தி – 1
  • சிக்கன் – 1/2 கிலோ
  • பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கியது)
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
  • சீரக தூள் – 1/2 டீஸ்பூன்
  • சில்லி பிளேக்ஸ் – 1/2 டீஸ்பூன்
  • தந்தூரி தூள் – 1/2 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
  • மயோனைஸ் – 2 டீஸ்பூன்
  • தயிர் – 2 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • கருவேப்பிலை & கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை

முதலில், காடாயினை காய வைத்து சூடு ஆகியதும், எண்ணெய் தேவையான அளவிற்கு ஊற்றி அதில் பொடியாக நறுக்கி வைத்த பூண்டினை சேர்க்க வேண்டும். அதில் சிக்கனை போட்டு வதக்கவும். சிக்கன் நன்றாக வதங்கும் வரை நன்றாக கிளறவும். சிறிதளவு தண்ணீர் விட்டு சிக்கன் வேகும் வரை வதக்கவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகாய் தூள், சில்லி பிளேக்ஸ் மற்றும் தந்தூரி தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து நன்றாக கிளறவும். பிறகு இந்த கலவையினை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். அதன் பிறகு, தனியாக மயோனைஸ், தயிர், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக கலக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும்.

‘தாலி கட்டிக்க போறேன்’ – பாரதியுடன் கூத்தடிக்கும் வெண்பா! வைரலாகும் வீடியோ!!

பிறகு சப்பாத்தியினை எடுத்து இந்த தயிர் கலவையினை எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் மேல் சிக்கன் கலவையினை எடுத்து வைத்து கொண்டு, நன்றாக ரோல் செய்யவும். பின், மீண்டும் ஒரு வானொலியை காய வைத்து அதில் இந்த சப்பாத்தியை வைத்து பொன்னிறமாக வரும் வரை சுடவும். அவ்வளவு தான்!!

சூடான “சிக்கன் ரோல்” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here