சிக்கன் மஸ்ரூம் காம்பினேஷனில் சூப்பரான பிரைடு ரைஸ்… வீட்டுல செஞ்சு தூள் கிளப்புங்க!!!

0
சிக்கன் மஸ்ரூம் காம்பினேஷனில் சூப்பரான பிரைடு ரைஸ்... வீட்டுல செஞ்சு தூள் கிளப்புங்க!!!
சிக்கன் மஸ்ரூம் காம்பினேஷனில் சூப்பரான பிரைடு ரைஸ்... வீட்டுல செஞ்சு தூள் கிளப்புங்க!!!

பிரியாணிக்கு அடுத்தபடியாக அனைவரின் மனதிலும் ஆசை மற்றும் பசியை தூண்டக் கூடிய ஒரு வகை உணவு பிரைடு ரைஸ். அந்த அளவுக்கு நம்ம அனைவரையும் கவரக்கூடியது. இந்நிலையில் நாம் இந்த பதிவில் பார்க்க இருப்பது சிக்கன் மஷ்ரூம் காம்பினேஷனில் சூப்பரான சுவையான ஒரு பிரைடு ரைஸ் தான்.

சிக்கன் மஸ்ரூம் காம்பினேஷனில் சூப்பரான பிரைடு ரைஸ்... வீட்டுல செஞ்சு தூள் கிளப்புங்க!!!
சிக்கன் மஸ்ரூம் காம்பினேஷனில் சூப்பரான பிரைடு ரைஸ்… வீட்டுல செஞ்சு தூள் கிளப்புங்க!!!

தேவையான பொருட்கள்:

காளான் – 250 கிராம்

போன்லெஸ் சிக்கன் – 500 கிராம்

பாஸ்மதி அரிசி – 2 கப்

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

மிளகு தூள் – 2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி

சோள மாவு – 1 தேக்கரண்டி

கேரட் – 1

முட்டைகோஸ் – 1/2

முட்டை – 4

எண்ணெய் – தேவையான அளவு

வெங்காயம் – 1

சில்லி சாஸ் – 1 தேக்கரண்டி

சோயா சாஸ் – 1 தேக்கரண்டி

சிக்கன் மஸ்ரூம் காம்பினேஷனில் சூப்பரான பிரைடு ரைஸ்... வீட்டுல செஞ்சு தூள் கிளப்புங்க!!!
சிக்கன் மஸ்ரூம் காம்பினேஷனில் சூப்பரான பிரைடு ரைஸ்… வீட்டுல செஞ்சு தூள் கிளப்புங்க!!!

செய்முறை

முதலில் 2 கப் அரிசியை 1 மணி நேரம் ஊற வைத்துக் கொண்டு, அதை கொதித்து வரும் தண்ணீரில், எண்ணெய், உப்பு சேர்த்து வேக விட வேண்டும். அதன் பின்னர் 90% வெந்து வந்த அரிசியை எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும். அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் சின்ன சின்னதாக வெட்டி வைத்து உள்ள சிக்கன் துண்டுகளுடன் மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளற கொள்ள வேண்டும்.

அதே போல் நறுக்கி வைத்து உள்ள காளான் உடன் மிளகாய் தூள்,மிளகு தூள், கரம் மசாலா தூள்,சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும், அதே போன்று காளானையும் 65 மாதிரி பொரித்து எடுத்து கொள்ள வேண்டும்.

சிக்கன் மஸ்ரூம் காம்பினேஷனில் சூப்பரான பிரைடு ரைஸ்... வீட்டுல செஞ்சு தூள் கிளப்புங்க!!!
சிக்கன் மஸ்ரூம் காம்பினேஷனில் சூப்பரான பிரைடு ரைஸ்… வீட்டுல செஞ்சு தூள் கிளப்புங்க!!!

அதன் பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் முட்டை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீவி வைத்து உள்ள கேரட் மற்றும் முட்டைகோஸ் சேர்த்து முக்கால் வாசி வேக விட வேண்டும்.

அதன் பின்பு அதில் சோயா சாஸ், சில்லி சாஸ் மற்றும் உப்பு சேர்த்து கிளறி வேண்டும். அதன் பின்னர் வேக வைத்து உள்ள அரிசி, பொரித்து வைத்து உள்ள முட்டை, சிக்கன் மற்றும் காளான் சேர்த்து மெதுவாக கிளறி விட வேண்டும். இறக்கும் தருவாயில் மிளகு தூள் சேர்த்து கொள்ளவும். தற்போது சுவையான மணமான மஸ்ரூம் சிக்கன் ரைஸ் ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here