தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

0

தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை நிலவரம் பற்றிய தகவலையும் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

தென் தமிழக மாவட்டங்களில் இன்று ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும். மேலும் நாளை தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வருகிற 08.03.2021 முதல் வருகிற 10.03.2021ம் தேதிகள் வரை தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

#INDvsENG 4வது டெஸ்ட் – அஸ்வின், அக்சர் மீண்டும் அசத்தல்! 6 விக்கெட்டுகள் காலி!!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். மேலும் அதிகபட்சமாக வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்சமாக வெப்பநிலை 24 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எந்த பகுதியிலும் மழை பதிவாகவில்லை. மேலும் மீனவர்களுக்கு கடலுக்குள் செல்வதற்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here