சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023-24.., ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை, மாணவர்களுக்கு சுற்றுலா!!!

0
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023-24.., ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை, மாணவர்களுக்கு சுற்றுலா!!!
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023-24.., ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை, மாணவர்களுக்கு சுற்றுலா!!!

மத்திய அரசு பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து கடந்த வாரம் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப் பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் மாநகராட்சி நேரடி பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வெளியாகி இருந்தது. அந்த வகையில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் பயன் பெரும் வகையில் சில அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு “பணி பாதுகாப்பு சட்டம்” தீர்மானம்., ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை!!!

  • சென்னையில் உள்ள 10 மேல்நிலை பள்ளிகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
  • மாநரகராட்சியில் உள்ள அனைத்து பள்ளிகளும் சீரமைக்கப்பட்டு தரமான வகுப்பறைகள், கட்டிடங்கள் அமைத்து கொடுக்கப்படும்.
  • மாநகராட்சி பள்ளிகளில் படித்து அரசு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு அரசு சார்பில் சலுகைகள் வழங்கப்படும். மேலும் ஜேஇஇ, க்ளேட், நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்தப்படும்.
  • மாநகராட்சி உறுப்பினர்களின் வார்டுகளை மேம்படுத்துவதற்கான நிதியை ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • அதே போன்று மாநகராட்சி பள்ளிகளில் 10 ஆம், 12 ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கான ஊக்கத்தொகையை ரூ.1,500 ல் இருந்து ரூ.3000 மாக உயர்த்தி வழங்கப்படும்.
  • அரசு பள்ளிகளில் 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவமுகாம்கள் ஏற்படுத்தப்படும்.
  • 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா ஏற்படுத்தி தரப்படும்.
  • 10 ஆம், 12 ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்பட்டு சிறப்பு வகுப்பில் மாணவர்களுக்கு சிறுதானிய திண்பண்டங்கள் அரசு சார்பில் கொடுக்கப்படும்.
  • பள்ளிகளில் ஐக்கிய நாடுகள் குழு அமைக்கப்பட்டு கற்றல், கற்பித்தல் திறன்கள் கண்காணிக்கப்படும்.
  • 10 ஆம், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு career guidance programme வகுப்புகள் நடத்தப்படும். மேலும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தினமும் 10 நிமிடங்கள் Happy Class வகுப்புகள் நடத்தப்பட்டு, அதில் நன்னெறி பண்புகள் கற்பிக்கப்படும்.
  • சென்னையில் மக்களை தேடி மேயர் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். அப்போது பொதுமக்கள் தங்கள் குறைகளை மேயரிடம் தெரிவிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here