பிசிசிஐயின் வருட ஒப்பந்தத்தில் இணைந்த சஞ்சு சாம்சன்…, எந்ததெந்த வீரருக்கு எவ்வளவு சம்பளம் ஃபுல் லிஸ்ட் இதோ!!

0
பிசிசிஐயின் வருட ஒப்பந்தத்தில் இணைந்த சஞ்சு சாம்சன்..., எந்ததெந்த வீரருக்கு எவ்வளவு சம்பளம் ஃபுல் லிஸ்ட் இதோ!!
பிசிசிஐயின் வருட ஒப்பந்தத்தில் இணைந்த சஞ்சு சாம்சன்..., எந்ததெந்த வீரருக்கு எவ்வளவு சம்பளம் ஃபுல் லிஸ்ட் இதோ!!

வருடம் தோறும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் செயல்திறனை கருத்தில் கொண்டு பிசிசிஐயானது, கிரேடு A +, A, B மற்றும் C என வீரர்களை பிரித்து வைக்கிறது. இந்த பிரிவில் உள்ள வீரர்களின் ஒப்பந்தத்தை பொறுத்து அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 2022-23 ஆண்டுக்கான ஒப்பந்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், டாப் கிரேடில் உள்ள வீரர்களுக்கு 7 கோடிலிருந்து, 5 கோடி, 3 கோடி மற்றும் ஒரு கோடி என படிப்படியாக குறைக்கப்பட்டு, ஊதியமாக இந்தியா வீரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, ஜடேஜா, அஸ்வின் மற்றும் அக்சார் பட்டேல் ஆகிய 3 ஆல் ரவுண்டர்கள் இந்திய அணியில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததால், பதிவு உயர்வு பெற்றுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இவர்களில், ஜடேஜா கிரேடு A+ யில், ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ராவுடன் இடம் பெற்றுள்ளார். மேலும், அஸ்வின், அக்சார் பட்டேல் மற்றும் ஹர்திக் பாண்டியா கிரேடு A யில், முகமது ஷமி மற்றும் ரிஷப் பண்ட்-துடன் இணைந்துள்ளனர். இவர்களை தொடர்ந்து, கே எல் ராகுல் மற்றும் தவான் சமீபகாலமாக அணியில் சிறந்த பங்களிப்பை அளிக்காவிட்டாலும், கிரேடு B மற்றும் C யில் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில், சஞ்சு சாம்சன் தனது முதல் பிசிசிஐ ஆண்டு ஒப்பந்தத்தை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புற்றுநோயால் பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!!

கிரேடு A+ (7 கோடி):
ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா

கிரேடு A (5 கோடி):
ஹர்திக் பாண்டியா, ஆர் அஸ்வின், முகமது ஷமி, ரிஷப் பண்ட், அக்சர் படேல்

கிரேடு B (3 கோடி):
சேதேஷ்வர் புஜாரா, கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில்

கிரேடு C (ஒரு கோடி):
உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே எஸ் பாரத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here