முன்னாள் எம்பியும், நடிகருமான இன்னசென்ட் காலமானதை தொடர்ந்து திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்னசென்ட்
மலையாளம், தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 750 க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் இன்னசென்ட். இவர் தமிழில் ‘லேசா லேசா’, ‘நான் அவளை சந்தித்தபோது’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஒரு பக்கம் சினிமாவில் அசத்தினாலும் இன்னொரு பக்கம் அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்தார். அந்த வகையில் 2014 ல் சாலகுடிக்கு தொகுதிக்கு எம்.பி.யாகவும் பொறுப்பேற்றார். நடிப்பு, அரசியல் என இரண்டிலும் அசத்தி வந்த இவர் சில மாதம் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் மார்ச் 3ஆம் தேதி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு மலையாள திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகமே அஞ்சலி செலுத்தி வருகிறது.