சென்னையில் தீவிரமாகும் ஊரடங்கு விதிமுறைகள் – காவல் ஆணையர் மக்களளுக்கு வேண்டுகோள்…!

0
commissioner
commissioner

தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவருகிறது அதுவும் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 3 மாவட்டங்கள்தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.கொரோனாவுக்கு சென்னையில் மட்டும் 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.எனவே சென்னை மற்றும் பிற 3 மாவட்டங்களுக்கு இன்று நாள்ளிரவு முதல் ஜூன் 30வரை முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.இதனையடுத்து,ஊரடங்கு போடப்பட்ட மாவட்டங்களில் விதிமுறையும் காவல்துறை நடவடிக்கையும் தீவிரமாக இருக்கும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை போட்டுத்தாக்கும் மாஸ்க் – சுவிட்சர்லாந்து புதிய கண்டுபிடிப்பு..!

ஊரடங்கு தீவிரமாக இருக்கும் மீறினால் கடும் நடவடிக்கை

corona lockdown
corona lockdown

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

சென்னை மாம்பழ காவல் துறை சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பாலமுரளி கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழந்தார்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் காவல் அதிகாரி ஆவர்.இவரது மறைவுக்கு தமிழ்நாடு அணைத்து காவல்துறையினரும் அஞ்சலி செலுத்தினர்.கொரோனா தாக்கம் குறையாமல் இருக்கும் நிலையில் சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய மாவட்டத்துக்கு இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30 வரை முழுஉரடங்கு அறிவிக்கபட்டுள்ளது.இந்த ஊரடங்கு பற்றி பேசிய சென்னை காவல் ஆணையர் இந்த ஊரடங்கின் பொது முக்கிய பிரதான சாலைகள் அனைத்தும் மூடப்படும்.மக்கள் அனைவரும் இந்த ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.மற்றும் கட்டுப்பாடுகள் விதிமுறையை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஊரடங்கின் விதிமுறைகள்,கட்டுப்பாடுகள்

மேலும் காவல் ஆணையர் கூறிய விதிமுறைகள் மற்றும் மக்களை பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள்

*தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்திற்குள் உள்ள கடைக்கு மட்டுமே செல்லலாம்

*காய்கறி,மளிகை பொருட்களை வாங்க வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை

*ரயில் நிலையம், விமான நிலையம் செல்ல வாகனங்களுக்கு தனியே அனுமதி;ஏ பாஸ் அனுமதி இல்லாமல் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்

corona lockdown
corona lockdown

*வெளிமாவட்டத்தில் இருந்து வந்து செல்லும் தொழிலாளர்கள் தினசரி வந்து செல்ல அனுமதியில்லை.

*டிரோன் கேமெரா மூலம் தேவையின்றி வெளியில் வருவோரை கண்காணிக்கப்படும்

*சென்னையில் 288 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

*போலி இ பாஸ் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

*முழு ஊரடங்கில் 16,000 காவலர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்; தேவைப்பட்டால் அதிகமாக பயன்படுத்தப்படுவார்கள்.

*அனுமதிக்கப்பட்ட 33% ஊழியர்களுக்கு அடையாள அட்டை போதுமானது

*அண்ணாசாலை,காமராஜர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் மூடப்படும்

*வழக்கமான போக்குவரத்திற்கு சென்னை சாலைகளில் அனுமதியில்லை

*அறிவுரை சொல்லி அனுப்பியதால் கடந்த முறை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை

* முகக்கவசம் அணியாமல் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

*திருமணம், இறப்பு தவிர வேறு எதற்கும் முன் அனுமதி பெற்றிருந்தால் ரத்து

*கடந்த ஊரடங்குகளின் போது பெறப்பட்ட இ-பாஸ்கள் செல்லுபடியாகாது, இம்முறை புதிதாக இ-பாஸ் பெற வேண்டும்

*சமூக இடைவெளி, நேரக்கட்டுப்பாட்டை கடைபிடிக்காத கடைகள், மார்க்கெட் மூடப்படும்

*உரிய காரணங்களின்றி வெளியே சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்

*கடை உரிமையாளர்கள் பொதுமக்கள் கைகளை கழுவ சோப்பு தண்ணீர் சானிடைசர் வைக்க  வேண்டும்

*நோய் தீவிரம் அடைந்துள்ளதால் மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகிறோம் எனவும் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here