கொரோனாவை போட்டுத்தாக்கும் மாஸ்க் – சுவிட்சர்லாந்து புதிய கண்டுபிடிப்பு..!

0
Livinguard-mask
Livinguard-mask

கொரோனா தொற்று தற்போது நாடெங்கிலும் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸை அளிக்கும் தொழில்நுட்பம் கொண்ட முகக்கவசத்தை கண்டறிந்துள்ளதாக சுவிட்சர்லாந்து நிறுவனம் அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து 

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் சுவிட்சர்லாந்தை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனம், துணிகளை கிருமிநீக்கம் செய்ய பயன்படுத்தப்படும் தங்கள் தொழில்நுட்பம் கொரோனா வைரசையும் கொல்வதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

லிவிங்கார்டு டெக்னாலஜி
லிவிங்கார்டு டெக்னாலஜி

இந்த நிறுவனத்திற்கு சொந்தக்காரரான சஞ்சீவ் சுவாமி வெளியிட்ட அறிவிப்பில், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாஸ்குகளை செய்யும் சோதனை முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜக் நகரில் அமைந்துள்ள லிவிங்கார்டு டெக்னாலஜி என்ற அந்த நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கிருமி நாசினி மாஸ்க்

இந்த தொழில்நுட்பம், மாஸ்க் செய்யப்பட்ட துணியின் மேற்பரப்பில் ஒரு நேர்மறை மின்னோட்டத்தை ஏற்படுத்துவதன் மூலம் இயங்குகிறது. இதனால் கிருமிகள் இந்த மாஸ்கின் மேற்பரப்பைத் தொடும்போது. கிருமிகளின் செல் எதிர்மறை மின்னோட்டம் கொண்டதால் அவை அழிக்கப்படுகின்றன.

Livinguard-mask
Livinguard-mask

இந்த தொழில்நுட்பம், இந்த மாஸ்குகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும் உகந்ததாக்குகிறது. 210 முறை இந்த மாஸ்குகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம், அவற்றை துவைத்தும் மீண்டும் பயன்படுத்தலாம் என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here