உங்கள நம்புனோம்.., காப்பாத்திட்டீங்க, சாம்பியன்ஸ் லீக்கில் ஹாட்ரிக் அடித்து அசத்திய ராபர்ட்.., வெற்றி குஷியில் பார்சிலோனா!!

0
உங்கள நம்புனோம்.., காப்பாத்திட்டீங்க, சாம்பியன்ஸ் லீக்கில் ஹாட்ரிக் அடித்த அசத்திய ராபர்ட்.., வெற்றி குஷியில் பார்சிலோனா!!
உங்கள நம்புனோம்.., காப்பாத்திட்டீங்க, சாம்பியன்ஸ் லீக்கில் ஹாட்ரிக் அடித்த அசத்திய ராபர்ட்.., வெற்றி குஷியில் பார்சிலோனா!!

விக்டோரியா ப்ளெசன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பார்சிலோனா அணி வீரர் ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம் பல பாராட்டுகளுக்கு சொந்தக்காரராக வலம் வருகிறார்.

பார்சிலோனா VS விக்டோரியா ப்ளெசன்!

ஆண்கள் கால்பந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் தொடர் ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள Spotify Camp Nou என்ற மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதன் படி தகுதி சுற்றுக்கான ஆட்டத்தில் குரூப் C பிரிவில் இடம்பிடித்துள்ள பார்சிலோனா மற்றும் விக்டோரியா ப்ளெசன் அணிகளுக்கு இடையிலான தகுதி சுற்று ஆட்டம் நடைபெற்றது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பார்சிலோனா வீரர்கள் சிறப்பாக விளையாடி 5 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். மேலும் பார்சிலோனா அணிக்காக ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி, பிராங்க் கெஸ்ஸி, பெரான் டோரஸ் ஆகியோர் கோல் அடித்து அணியை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த ஆட்டத்தில் லெவன்டோவ்ஸ்கி 3 கோல் அடித்து தனது ஹாட்ரிக்கை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் இதுவரை நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரில் லெவன்டோவ்ஸ்கி ஒட்டுமொத்த ஆறாவது ஹாட்ரிக்கை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை அணியில் எடுப்பதற்காக அதிக ஏல தொகை கொடுத்து பார்சிலோனா அணி வாங்கியுள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் லெவன்டோவ்ஸ்கி பார்சிலோனா அணியை வெற்றி பெற வைத்துள்ளார். இந்த வெற்றியை தொடர்ந்து பார்சிலோனா அணி அடுத்ததாக பேயர்ன் அணியை எதிர்கொள்ள உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here