விக்னேஷ் சிவன் பாணியில் நடிகையை திருமணம் செய்த இளம் இயக்குனர் – வாழ்த்தும் ரசிகர்கள்!

0
marriage
விக்னேஷ் சிவன் பாணியில் நடிகையை திருமணம் செய்த இளம் இயக்குனர் - வாழ்த்தும் ரசிகர்கள்!

வளர்ந்து வரும் இளம் இயக்குனரான ஸ்ரீ கணேஷ் பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்து உள்ளார். இவர்களது திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் ஸ்ரீ கணேஷ்:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறார்கள். அதில் ஒருவராக இருப்பவர் தான் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இந்த வெற்றியை தொடர்ந்து இளம் நடிகரான அதர்வாவை வைத்து குருதி ஆட்டம் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தனது அடுத்த படத்தை நோக்கி ஈடுபட்ட வேளையில் திடீரென பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்டார். அதாவது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கி உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை சுகாசினி சஞ்சீவ்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவரும் ஸ்ரீ கணேஷும் நீண்ட காலமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலை பெற்றோர்கள் ஏற்று கொண்டு அண்மையில் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த தம்பதிக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here