விவசாயிகளுக்கு ஷாக்.,இனி உங்களுக்கு இந்த தொகை கிடையாது? மத்திய அரசு பரபரப்பு அறிக்கை!!

0
விவசாயிகளுக்கு ஷாக்.,இனி உங்களுக்கு இந்த தொகை கிடையாது? மத்திய அரசு பரபரப்பு அறிக்கை!!
விவசாயிகளுக்கு ஷாக்.,இனி உங்களுக்கு இந்த தொகை கிடையாது? மத்திய அரசு பரபரப்பு அறிக்கை!!

மத்திய அரசின் விவசாயிகளுக்கான கிசான் நிதி திட்டத்தில் பயனடையும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு

மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்து வருகிறது . அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு விவசாயிகளுக்காக மத்திய அரசு கிசான் நிதி திட்டத்தை கொண்டு வந்தது . இந்த திட்டத்தின் படி விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இரண்டு மாதத்திற்கு ஒரு தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த திட்டத்தின் படி 12 தவணை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த கிசான் நிதி திட்டத்தின் மூலம் விவசாயிகள் பலரும் பயன் பெற்று வருகின்றனர். என்ன தான் இந்த திட்டத்தில் பல அப்டேட்களை அரசு செய்தாலும், இதில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் அண்மையில் கூட இந்த கிசான் நிதி திட்டத்தில் போலியான ஆவணங்களை கொடுத்து பலரும் பயன் பெற்று வந்ததாக தகவல்கள் வெளியானது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்.., மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!

இதனால் பலரும், சரியான முறையில் விசாரணை செய்து உரியவர்களுக்கு இந்த திட்டத்தினை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மத்திய அரசின் கிசான் நிதி திட்டத்தில் 67% விவசாயிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் இவர்களுக்கு இந்த திட்டத்தின்படி எதுவும் வழங்கப்பட மாட்டாது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை இன்னும் மத்திய அரசு வெளியிடாத நிலையில் எப்போது இதற்கான அறிவிப்பு வரும் என விவசாயிகள் காத்துக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here