எல்லா இடத்திலும் நீங்க தான்…, தோனியை புகழ்ந்து தள்ளிய விராட் கோஹ்லி!!

0
எல்லா இடத்திலும் நீங்க தான்..., தோனியை புகழ்ந்து தள்ளிய விராட் கோஹ்லி!!
எல்லா இடத்திலும் நீங்க தான்..., தோனியை புகழ்ந்து தள்ளிய விராட் கோஹ்லி!!

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோஹ்லி, தல தோனியை குறித்து பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தோனி – விராட் கோஹ்லி:

இந்திய அணியின் கேப்டன் என்றாலே முதலில் அனைவருக்கும் நினைவில் வருவது, தல தோனி தான். இதற்கு காரணம், டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போன்ற பெரிய அளவிலான தொடர்களை, இந்திய அணி இவரது தலைமையின் கீழ் தான் வென்றது. மேலும், ஐபிஎல் தொடரிலும் பல முறை CSK அணி பட்டம் வெல்ல உறுதுணையாக இருந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர், கேப்டனாக பல சாதனைகளை செய்தாலும், இந்திய அணியில் உள்ள இளம் வீரர்களை அதிகமாக ஊக்கப்படுத்தி வருவதில் வல்லவர். இந்த வகையில் தான், விராட் கோஹ்லியை தோனி, ஒரு கேப்டனாகும் அளவுக்கு தயார்படுத்தி வந்தார். இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவு எப்போதும் சிறப்பாகவே இருக்கும். விராட் கோஹ்லி டெஸ்ட் தொடரில் இருந்து, விலகிய போது தோனி ஒருவர் மட்டுமே ஆறுதல் கூறியதாக, முன்பு தகவல்கள் வெளியாகி இருந்தன.

டெஸ்ட் தொடர்களில் களம் இறங்கப்போவது எப்போது?? பதில் அளித்த சூர்யகுமார்!!

இந்நிலையில், இவர்களுக்கு இடையிலான பிணைப்பை, மேலும் வெளிப்படுத்தும் விதமாக, விராட் கோஹ்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இவர் (தோனி) எல்லா இடத்திலும் உள்ளார். தண்ணீர் பாட்டிலில் கூட என்று ஸ்டோரி போட்டுள்ளார். இவர் அருந்திய தண்ணீர் பாட்டிலில் தோனியின் முகம் இருந்துள்ளது. இதனை போட்டோ எடுத்து இவ்வாறு பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here