குணசேகரனை சீண்டும் அப்பத்தா.., ஜனனி எடுக்கும் அதிரடி முடிவு.,சூடுபிடிக்கும் எதிர் நீச்சல் சீரியல்!!

0
குணசேகரனை சீண்டும் அப்பத்தா.., ஜனனி எடுக்கும் அதிரடி முடிவு.,சூடுபிடிக்கும் எதிர் நீச்சல் சீரியல்!!
குணசேகரனை சீண்டும் அப்பத்தா.., ஜனனி எடுக்கும் அதிரடி முடிவு.,சூடுபிடிக்கும் எதிர் நீச்சல் சீரியல்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து வரும் எபிசோட்களில் என்ன நடக்க போகிறது என பார்க்கலாம்.

எதிர் நீச்சல்

எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் எதிர்பார்ப்பையும் தாண்டி பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஜனனி வீட்டிற்கு திரும்பி வரமாட்டார் என குணசேகரன் நினைத்த நேரத்தில் பட்டம்மாள் அப்பத்தா உதவியுடன் வீட்டிற்குள் நுழைந்தார். இதனால் குணசேகரன் வீட்டுக்குள் ஒரு பிரளயமே வெடித்தது. சக்தி ஜனனியை வீட்டை விட்டு வெளியேற்ற எவ்வளவு முயற்சி செய்தும் பட்டம்மாள் அப்பத்தா அதற்கு இடம் கொடுக்கவில்லை. இதனால் குணசேகரன் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில் இப்போது புதிய ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஜனனி வீட்டில் உள்ளவர்களிடம் எனக்காக யாரும் எதுவும் செய்ய வேண்டாம் சொல்லிவிட்டு வெளியே கிளம்புகிறார். அப்போது பார்த்து குணசேகரனின் அம்மா இந்த வீட்ல எல்லா வேலையும் பாக்குறது நானு, ஆனா எல்லாமே ஜனனிகா என புலம்புகிறார். இதைக் கேட்ட பட்டம்மாள் உனக்கு எல்லா வசதியும் செஞ்சு கொடுத்து உன்னை வளர்த்து விட்டது நான் தான். ஆனா, நீ என்கிட்டயே உன் வேலையை காட்டுறியா? உனக்கு இனிமேல் தான் இருக்கு என எச்சரிக்கிறார்.

அட கடவுளே.., நம்ம சாக்லேட் பாயா இது.., ஆள் அடையாளமே தெரியாம இப்படி ஆகிட்டீங்களே.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இதை கேட்ட குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் ஆடிப் போகின்றனர். இதை வைத்து பார்க்கும்போது அடுத்து வரும் எபிசோடுகளில் குணசேகரன், ஜனனி மற்றும் பட்டம்மாள் பாட்டியை அடக்க பல சூழ்ச்சிகளை செய்வார் என்று தெரிகிறது. ஆனால் ஜனனி, குணசேகரின் ஆட்டத்தை அடக்கி வீட்டில் உள்ள பெண்களின் ஆசையை நிறைவேற்றுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. எனவே அடுத்து வரும் எபிசோடுகளில் என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here