53வது சர்வதேச திரைப்பட திருவிழா., 3 தமிழ் படங்களுக்கு அங்கீகாரம்! இந்திய அளவில் 25 படங்கள் தேர்வு!!

0
53வது சர்வதேச திரைப்பட திருவிழா., 3  தமிழ் படங்களுக்கு அங்கீகாரம்! இந்திய அளவில் 25 படங்கள் தேர்வு!!

மத்திய ஒளிபரப்பு அமைச்சகத்தின் சர்வதேச அளவிலான 53 வது திரைப்படத் திருவிழாவில் திரையிடப்படுவதற்கு 25 இந்திய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 3 தமிழ் திரைப்படங்களும் உள்ளடக்கம்.

முக்கிய கவுரவம் :

ஒவ்வொரு ஆண்டும், மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பாக சர்வதேச திரைப்பட திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 79 நாடுகளைச் சேர்ந்த 280 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்த விழாவில் ஒளிபரப்பப்பட உள்ளது. இது குறித்த தகவலை வெளியிட்ட மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் டாக்டர் எல். முருகன் வெளியிட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது பற்றி அவர் தெரிவித்ததாவது, , நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 9 நாட்கள், இந்த சர்வதேச விழா கோவாவில் பிரம்மாண்டமாக நடக்கும் என்றும், இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரமாக செய்து வருவதாகவும் உறுதியளித்தார். இந்திய அளவில் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 20 திரைப்படம் அல்லாத படங்களும் அடங்கும் என்றும் அறிவித்தார்.

இந்த படங்களின் வரிசையில் சூர்யாவின் ஜெய் பீம், எஸ் கமலக்கண்ணன் இயக்கிய குரங்கு பெடல் மற்றும் ரா. வெங்கட் இயக்கிய ஒரு படம் என 3 தமிழ் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த படங்களை தொடர்ந்து காஷ்மீர் பைல்ஸ், ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது போக 183க்கு மேற்பட்ட திரைப்படங்கள் இந்த சர்வதேச நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இருக்கும் என்று, மத்திய ஒளிபரப்பு துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here