புரோ கபடி லீக்: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்திய பெங்களூரு புல்ஸ்…, முதலிடத்தை தட்டி தூக்கி அசத்தல்!!

0
புரோ கபடி லீக்: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்திய பெங்களூரு புல்ஸ்..., முதலிடத்தை தட்டி தூக்கி அசத்தல்!!

புரோ கபடி லீக் தொடரில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக அபாரமாக விளையாடிய, பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றதுடன், முதலிடத்தை தட்டி சென்றது.

புரோ கபடி லீக்:

புரோ கபடி லீக் தொடரின் 2வது சுற்றுகள் அனைத்தும் புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது தற்போது அரையிறுதி பாதையை நோக்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று புனேரி பல்டன் அணிக்கு எதிராக ஹரியானா ஸ்டீலர்ஸ் மோதியது. இந்த போட்டியில், புனேரி பல்டனின் அஸ்லாம் இனாம்தார் 5 ரைடுகள் சென்று அதிரடியாக விளையாடி 10 புள்ளிகளை கைப்பற்றினர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவருக்கு உறுதுணையாக மோஹித் கோயத் சிறப்பாக செயல்பட்டு 10 புள்ளிகளை அணிக்காக பெற்று தந்தார். இதன் மூலம், புனேரி பல்டன் அணியானது, 41-28 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற, மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸுக்கு எதிராக தெலுங்கு டைட்டன்ஸ் மோதியது.

இதில், தெலுங்கு டைட்டன்ஸ் அணியானது 28-36 என்ற புள்ளி வித்தியாசத்தில் பெங்கால் வாரியர்ஸிடம் தோல்வியை தழுவியது. இதே போல, அடுத்த அடுத்த ஆட்டத்தில், பெங்களூரு புல்ஸ் அணி 45-38 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம், பெங்களூரு புல்ஸ் 56, புனேரி பல்டன் 54 புள்ளிகளுடன் முதல் 2 இடத்தை பிடித்துள்ளன. இதில், பெங்கால் வாரியர்ஸ் 42 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here