CBSE, JEE & NEET தேர்வுகள் ரத்து?? மனிதவள மேம்பாட்டு துறை முக்கிய அறிவிப்பு!!

0
Exams
Exams

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ள நிலையில் இந்த வருடத்திற்கான CBSE, JEE & NEET நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவது குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேர்வுகள் ரத்து:

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் 3 மாதத்திற்கு மேலாக பூட்டப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலின் வீரியமும் அதிகரித்து இந்தியாவில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் 1 முதல் 11ம் வகுப்பு வரை பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

exams
exams

இதனால் CBSE பாடத்திட்டத்திற்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதனை விசாரித்த நீதிபதிகள் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டனர். மேலும் JEE, NEET ஆகிய நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யுமாறும் நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பெற்றோர்களும் மாணவர்களை தேர்வுகளுக்கு அனுப்பமாட்டோம் என கூறியுள்ளனர்.

எச் -1 பி விசா தற்காலிக இடைநீக்கம் – டிரம்ப் உத்தரவு இந்தியர்களை அதிகளவு பாதிக்கும்!!

இந்நிலையில் CBSE, JEE, NEET ஆகிய தேர்வுகள் ரத்து செய்யப்படுவது குறித்த அறிவிப்பு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் இன்று அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here