‘நீட் குறித்த முறைகேடுகளை சிபிஐ கண்காணிக்கும் என நம்பிக்கை உள்ளது’ – நீதிமன்றம் அதிரடி!!

0

மத்திய அரசு நடத்தி வரும் நீட் தேர்வு குறித்த முறைகேடு வழக்குகளை சிபிஐ கண்காணிக்கும் என்று உயர்நீதிமன்றம் கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நீட்:

மத்திய அரசு மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வாக நீட் தேர்வை நடத்தி வருகிறது. இதனில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர முடியும். தொடக்க காலத்தில் இதற்கு தமிழகத்தில் பல எதிர்ப்புகள் இருந்தது. தற்போதும் இதற்கு எதிர்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதனை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எனவே இதில் எப்படியாவது தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக சிலர் சில குறுக்கு வழிகளை பின்பற்றுவர். தேர்வுகளில் ஆள்மாறாட்டம், போலி மதிப்பெண் சான்றிதழ் என பல தவறான வழிகளை பின்பற்றுவர். மேலும் இதனை அதிகாரிகளும் அதிரடியாக கண்டுபிடித்து விடுவர். தற்போது அந்த வகையில் இன்று நீதிமன்றத்திற்கு வந்த வழக்கில் நீட் முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டு கைதான ரஷீதின் ஜாமின் வழக்கு இன்று வந்தது.

திருச்சியில் சட்டமன்ற தேர்தல் நிறுத்தமா?? தேர்தல் அதிகாரி விளக்கம்!!

தற்போது இவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும் பேசிய நீதிபதி நீட் தேர்வு குறித்த அனைத்து முறைகேட்டையும் சிபிஐ கண்காணிக்கும் என்று நீதிமன்றம் நம்புகிறது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் டெல்லியில் நீட் முறைகேடு வழக்கு உள்ளது. தற்போது அதற்கு பதில் மனுவாக சமர்ப்பிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது என்று நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here