பிரதமர் வரும் வேளையில் வேட்பாளருக்கு கொரோனா – புதுவையில் பரபரப்பு!!

0

வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவதற்காக நாளை மாலை 4 மணி அளவில் புதுவைக்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி. இந்நிலையில் காரைக்கால் அதிமுக வேட்பாளருக்கு கொரோன தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகம் மற்றும் புதுவையில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தங்களது வேலைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று எதிர்பாராத வகையில் வேகமாக பரவி வருகிறது. இதனால் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது சற்று சவாலாக இருந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் புதுவையில் நாளை மாலை பிரதமர் வருகை தரவுள்ளார். புதுவைக்கு வரும் அவர் மாலை 4 மணி அளவில் ஏ.எப்.டி மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இவருடன் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இங்கு வந்த மோடி கூட்டத்தில் வைத்து வேட்பாளர்களை அறிமுகப்படுத்தவுள்ளார். இந்நிலையில் நாளை கூட்டத்தில் பங்குபெறும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Bengal will show 'Ram card' to TMC soon, says PM Modi - 5 key points

அவர் சொல்லித்தான் நாங்க வாழப்போறோமா??ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த இபிஎஸ்!!

இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஓர் தகவல் வெளியாகியுள்ளது. அதுஎன்னவென்றால் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் காரைக்கால் அதிமுக வேட்பாளரான அசனாவிற்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பிரதமர் வரும் வேளையில் இதுபோல் வேட்பாளர்களுக்கு கொரோனா கண்டறியப்படுவது சற்று வருத்தத்திற்குரியதே. மேலும் புதுவைக்கு முன்பு நாளை பிற்பகல் பிரதமர் தமிழகத்திற்கு வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here