திருச்சியில் சட்டமன்ற தேர்தல் நிறுத்தமா?? தேர்தல் அதிகாரி விளக்கம்!!

0

திருச்சியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் நிறுத்தி வைக்கப்போவதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வந்தது. தற்போது இதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் அடுத்த வாரம் செவ்வாய்கிழமை அன்று 234 தொகுதியிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து பணிகளையும் தேர்தல் அதிகாரிகள் மிக முனைப்புடன் செய்து வருகின்றனர். மேலும் கொரோனா தடுப்பிற்கான அனைத்து வகை நடவடிக்கைகளையும் தேர்தல் அதிகாரிகள் மிக சிறப்பாக செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தற்போது தபால் வாக்குகளை பெறுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தமிழகத்தில் இந்த முறை 100 சதவீதம் வாக்குகள் வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து விழிப்புணர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள திருச்சி மேற்கு தொகுதியில் சட்டமன்ற தேர்தல் நிறுத்திவைக்கப்போவதாக தொடர்ந்து தகவல் வெளியானது. இதனால் திருச்சி மேற்கு தொகுதி வாக்காளர்களிடம் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டது.

தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிரான அவமதிப்பு வழக்கு – முடிவுக்கு கொண்டு வந்த நீதிமன்றம்!!

தற்போது இதனை தெளிவுபடுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்திற்கு தேர்தல் அதிகாரியாக உள்ள திவ்யதர்ஷினி பதிலளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, திருச்சியில் சட்டமன்ற தேர்தல் நிறுத்திவைக்கப்போவதாக தொடர்ந்து வதந்தி வெளி வந்த வண்ணமாக இருந்து வருகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம். தேர்தல் திட்டமிட்டபடியே நடக்கும் என்று பதிலளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here