தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிரான அவமதிப்பு வழக்கு – முடிவுக்கு கொண்டு வந்த நீதிமன்றம்!!

0

தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆசிரியர்கள் சங்கம் தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். தற்போது இதனை நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வருகிற மே மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் அடுத்த வாரம் செவ்வாய்கிழமை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் அதிகாரிகள் மிக தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்காளர்கள் பயன்பெறும் வகையில் இந்த முறை தபால் வகை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் பயனடைந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் பெற்று வருகின்றனர். மேலும் தபால் வாக்குகள் அனைத்தும் மிக பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றம் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகளை அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆசிரியர்கள் சங்கம் கோபத்துக்குள்ளாகினர்.

‘தவறாக சித்தரிக்கப்பட்ட என்னுடைய கருத்துக்காக மிகவும் வருந்துகிறேன்’ – முதல்வரிடம் மன்னிப்பு கேட்ட ஆ.ராசா!!

மேலும் நீதிமன்றம் உத்தரவு கடைபிடிக்காத தலைமை தேர்தல் அதிகாரி மீது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் அவமதிப்பு வழக்கை நீதிமன்றத்தில் பதிவு செய்தது. தற்போது இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி கூறியதாவது, தேர்தல் என்னும் மிக பெரிய வேலை நடக்கும் நேரத்தில் இதுபோன்ற அரிதான தவறை நீதிமன்றம் அவமதிப்பதாக ஏற்றுக்கொள்ளாது என்று கூறி இந்த வழக்கை முடித்து வைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here