Saturday, June 29, 2024

செய்திகள்

43வது சென்னை புத்தக கண்காட்சி – ஜன.9 ல் தொடக்கம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 43-வது புத்தக கண்காட்சி வரும் ஜனவரி 9 முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை புத்தகக் காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 43-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 9-ம்...

டெல்லி ஜேஎன்யூ தாக்குதல் – இந்து அமைப்பு பொறுப்பேற்பு

டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலுக்கு இந்து ரக் ஷா தளம் என்ற சிறிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.  டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் நேற்று முதல்நாள் மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்கள். பொறுப்பேற்பு: அந்த கடுமையான தாக்குதலால் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்து ரக் ஷா தளம் பொறுப்பேற்றுள்ளது. நாங்கள்தான் ஆட்களை அனுப்பி அங்கு மாணவர்களை தாக்கினோம் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. ஹிந்து ரக் ஷா தள அமைப்பின் தலைவரான...

Anna University National Level TECHNOLOGY EXHIBITION 2020 cum TRAINING PROGRAMME

TECHNOLOGY ENABLING CENTRE Sponsored by Department of Science and Technology, Government of India. ORGANISED BY, Centre for Technology Development and Transfer, Anna University, Chennai. IMPORTANT DATES Last date for online registration : 31.01.2020 Deadline for Submission of Hard copy of application to reach CTDT office : 07.02.2020 Selection Notification to applicants : 14.02.2020 For More...

CBSE Art Exhibition 2019-2020

CBSE Art Exhibition for the academic session 2019-20 would be organized at Regional Level in different parts of the country on 22nd -23rd January, 2020. The National Level Exhibition will be held in Delhi on 4 th – 5 th February, 2020....

நீட் தேர்வு – 16 லட்சம் பேர் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வுக்கு (நீட்) இந்த ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வருகின்ற மே மாதம் 3-ம் தேதி அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடைபெறவுள்ளது. அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பா் 2-ஆம் தேதி தொடங்கியது. நீட்டிக்கப்பட்ட காலஅவகாசம் கடந்த திங்கள்கிழமை...

குரூப் 4 தேர்வில் முறைகேடா – டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு

கடந்த 2019 செப்டம்பர் 1 அன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.  அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கங்கள் பின்வருமாறு, அண்மையில் நடந்து முடிந்த தொகுதி 4 க்கான தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய இதர மாவட்டங்களை சார்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகப்படியான எண்ணிக்கையில் முதல் 100 தரவரிசைக்குள் வந்ததாக புகார் எழுந்துள்ளது.      1.  இராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வட்டங்களில் 128 தேர்வு மையங்களில் 32879 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெற்றது.  இதிலிருந்து 497 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை வட்டங்களில் பல்வேறு தேர்வுக்கூடங்களில் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களின் விபரங்கள் பின்வருமாறு, ...

குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2 தேர்விலும் முறைகேடு !! டி.என்.பி.எஸ்.சி நிலைப்பாடு என்ன ?

குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2 தேர்விலும் முறைகேடு !! டி.என்.பி.எஸ்.சி நிலைப்பாடு என்ன ? https://youtu.be/CovRYMMr060

நாடு முழுவதும் உள்ள பல்கலைகளில் போலீஸ் பாதுகாப்பு

டில்லி பல்கலையில் நடந்த வன்முறை தாக்குதலின் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள பல்கலைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டில்லி ஜே.என்.யூ பல்கலை வன்முறை: டில்லி ஜே.என்.யூ பல்கலையில் நேற்று இரவு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது முகமூடி அணிந்த நபர்கள் தாக்குதல் நடத்தினர்.  இதனால் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பியுள்ளன.  மேலும் தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு நேற்று டில்லி, ஹைதெராபாத், மேற்குவங்கம், மும்பை ஆகிய பல்கலைக்கழக மாணவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். போலீசார் பாதுகாப்பு: இந்நிலையில் இன்று (ஜன.,06) வாரணாசியில் உள்ள பானாரஸ் இந்து பல்கலை., அலிகர் இஸ்லாமிய பல்கலை., உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பல்கலை.,களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கவசம், தடிகளுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஒரே மாதத்தில் 491 பிஞ்சு குழந்தைகள் பலி – தொடரும் சோகம்

ராஜஸ்தான் மாநில மருத்துவமனையில் 272 பிறந்த குழந்தைகள், குஜராத் மாநில மருத்துவமனையில் 219 பிறந்த குழந்தைகள் கடந்த ஒரு மாதத்தில் உயிர் இழந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் நடந்த சோகம்,      கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ராஜஸ்தானில் பிகானீரிலுள்ள சர்தார் படேல் அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த 162 பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கோட்டா நகரிலுள்ள ஜே.கே.லான் அரசு மருத்துவமனையில் 110 பிறந்த குழந்தைகள் கடந்த மாதத்தில் பலியாயினர். குஜராத்திலும், கடந்த ஒரே மாதத்தில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலுள்ள அரசு மருத்துவமனையில் 134 பிறந்த குழந்தைகளும், அகமதாபாத்திலுள்ள அரசு மருத்துவமனையில் 85 பிறந்த குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். மாறிமாறி குற்றச்சாட்டு: இது குறித்து ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வரான அசோக் கெலாட், 'குழந்தைகள் இறப்பு ஒரு முக்கிய பிரச்னை. இதனை அரசியலாக்கக்கூடாது. ஒரு குழந்தை கூட சிகிச்சையின்போது உயிரிழக்கக்கூடாது என்பதில் அரசும், மருத்துவமனை நிர்வாகமும் கூடுதல் கவனம் மேற்கொள்ள வேண்டியது கடமையாகும்' என்றார். இது குறித்த கேள்விக்கு, குஜராத்தை ஆளும் பா.ஜ., முதல்வர் விஜய் ரூபானி செய்தியாளர்களுக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார். இந்நிலையில் இவ்விரு கட்சியினரும் மாறிமாறி குற்றச்ச்சாட்டுகளை தெரிவித்து வருவகின்றனர்.

ஆபரணத் தங்கத்தின் விலை விறுவிறு உயர்வு – இன்றைய நிலவரம்

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 31,000 ஐ தாண்டியுள்ளது.  இந்த புத்தாண்டு தொடங்கியதில் இருந்து நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே உள்ளது.  சர்வதேச சந்தையின் நிலவரத்திற்கேற்ப ஒவ்வொரு நாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை இன்று, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.31,168-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 64 உயர்ந்து ரூ. 3,896 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை இன்று, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 உயர்ந்து ரூ.52.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.  நேற்று 51 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.52,300 ஆக இருக்கிறது.
- Advertisement -

Latest News

IND vs SA 2024 WC Final: இறுதிப்போட்டியில் மழை குறுக்கீடு இல்லை.. வானிலை அறிக்கை வெளியீடு!!

2024 T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஜூன் 29) நடக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா...
- Advertisement -