Friday, June 28, 2024

செய்திகள்

அமெரிக்க படை தளம் மீது ஈரான் தாக்குதல் – பழிக்குப் பழி

அமெரிக்க ராணுவம் ஆள் இல்லா விமானம் மூலம் பாக்தாத் விமானநிலையம் அருகே நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் கீழ் இயங்கும் ஈரான் புரட்சிகர காவலர்கள் படையின் பிரிவான ஈரான் எலைட் குட்ஸ் படைத் தலைவர் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க...

ஜேஎன்யூ போராட்டத்தில் நடிகை தீபிகா படுகோன் பங்கேற்பு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதிக் கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து, கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் மிகப்பெரும் போராட்டத்தை நடத்திவருகின்றனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, முகமூடி அணிந்தவாறு ஜே.என்.யூ-வில் உள்ள சபர்மதி விடுதிக்குள் நுழைந்த 50 மர்ம நபர்கள், அங்கிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவர் மீதும் கடுமையான...

தொடங்கியது ‘பாரத் பந்த்’ – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஊதிய உயர்வு, வேலைவாய்ப்பின்மைக்கு தீர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை தடுத்தல், வங்கிகளின் கட்டாய இணைப்பை நிறுத்துதல், சர்ச்சைக்குரிய சட்டங்களை நீக்குதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் துவங்கியுள்ளது. பேச்சுவார்த்தை தோல்வி மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வாரை சந்தித்து இது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகள் கடந்த வாரம்...

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும், தமிழக அரசு ஆண்டு தோறும் பொங்கல் போனஸை வழங்கி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோன்று, சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பல்வேறு துறைகளில்...

அரசு பணியாளர்களை நியமிப்பதில் புதிய யுக்தி – முதலமைச்சர்

அரசு துறைகளில் பணியாளர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பே, தேவையான பணியாளர்களை முன்கூட்டியே தேர்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு ஜன.22ல் தூக்கு – டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லியில் நிர்பயா என்ற பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.  அப்பெண்ணின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நிர்பயா வழக்கு விபரம்: டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். 2013-ம் ஆண்டு சிறையில், ராம்சிங் என்ற குற்றவாளி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 18 வயதை எட்டாத ஒருவர் 3 ஆண்டுகள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை காலம் முடிந்த பிறகு, அவர் விடுவிக்கப்பட்டு விட்டார். எஞ்சியுள்ள நான்கு குற்றவாளிகளான அக்ஷய் குமார் சிங், முகேஷ், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து குற்றவாளிகள் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அதை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மரண தண்டனைக்கு உள்ளான குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். அதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தள்ளுபடி செய்துவிட்டார். டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு: இந்த நிலையில் நால்வரின் மரண தண்டனை உறுதி செய்வது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் இறுதி கட்ட விசாரணை இன்று நடைபெற்றது. கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சதீஷ்குமார் அரோரா முன்னிலையில் இரு தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அரசு தரப்பு...

போக்குவரத்து அபராதம் குறைப்பு – மாநில அரசுகளுக்கு கண்டனம்

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக, புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள அபராதங்களை குறைக்க, மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என, மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம்: மோட்டார் வாகன திருத்தச் சட்டம், கடந்த 2019ம் ஆண்டு, செப்., 1 முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி,      மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் - 10 ஆயிரம் ரூபாய் அபராதம் / 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை      ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் - 5 ஆயிரம் ரூபாய் அபராதம்      தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் - ஆயிரம் ரூபாய் அபராதம் இந்நிலையில், குஜராத், கர்நாடகா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநில அரசுகள் அபராத தொகையினை குறைத்து உத்தரவிட்டன.  இவ்வாறாக அபராத தொகையினை குறைக்க கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய சாலை...

ஒரு நாளில் 6 மணிநேரம், வாரத்தில் 4 நாட்கள் – பின்லாந்து பிரதமர் புதிய சலுகை

உலகின் இளைய மற்றும் பின்லாந்து நாட்டின் தற்போதைய பிரதமர் சன்னா மரின், 34, அந்நாட்டு குடிமக்களின் வேலை நேரத்தையும், நாட்களையும் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாளாகவும், அதில் 6 மணி நேரம் மட்டுமே பணி நேரமாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,      மக்கள் தங்கள் குடும்பங்கள், அன்புக்குரியவர்கள், பொழுதுபோக்குகள் மற்றும் கலாச்சாரம் போன்ற வாழ்க்கையின் பிற அம்சங்களுடன் அதிக நேரம் செலவிட தகுதியானவர்கள் என நான் நம்புகிறேன், என்றார். முன்னோடி ஜப்பான்!! ...

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிவு – இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து ரூ. 30,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 குறைந்து ரூ. 30,744-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.1.20 குறைந்து ரூ.51-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்கா ராணுவம் ஒரு தீவிரவாத இயக்கம் – ஈரான் அறிவிப்பு

அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக இது பார்க்கப்படுகிறது.  நீண்ட நாட்களாக அமெரிக்காவிற்கும் ஈராக்கிற்கும் இடையில் போர் பதற்றம் நிகழ்ந்து வருகிறது.  முக்கிய காரணம்: அமெரிக்க ராணுவம் ஆள் இல்லா விமானம் மூலம் பாக்தாத் விமானநிலையம் அருகே நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் கீழ் இயங்கும் ஈரான் புரட்சிகர காவலர்கள் படையின் பிரிவான ஈரான் எலைட் குட்ஸ் படைத் தலைவர் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அறிவித்தது. ஈரான் பரபரப்பு அறிவிப்பு: இப்போது புதிய திருப்பமாக அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.  ஒரு நாட்டின் ராணுவத்தை, இன்னொரு நாடு தீவிரவாத அமைப்பு என்று அறிவிப்பது இதுதான் முதல்முறை. உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக இது பார்க்கப்படுகிறது.  இதற்காக ஈரான் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனை தீவிரவாத இயக்க தலைமையகமாக அறிவித்தது. அமெரிக்காவின் முப்படைகளும் தீவிரவாத இயக்கம்தான் என்று ஈரான் கூறியுள்ளது.  இந்த முப்படைகளை தீவிரவாத இயக்கம் என்று அறிவித்து இருப்பதால், அதன் தலைவர் அதிபர் டிரம்ப் தீவிரவாதி என்று பொருள்படுவார். இது அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
- Advertisement -

Latest News

IND vs SA 2024 WC Final: இறுதிப்போட்டியில் மழை குறுக்கீடு இல்லை.. வானிலை அறிக்கை வெளியீடு!!

2024 T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஜூன் 29) நடக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா...
- Advertisement -