தொடங்கியது ‘பாரத் பந்த்’ – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
Today Strike

ஊதிய உயர்வு, வேலைவாய்ப்பின்மைக்கு தீர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை தடுத்தல், வங்கிகளின் கட்டாய இணைப்பை நிறுத்துதல், சர்ச்சைக்குரிய சட்டங்களை நீக்குதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் துவங்கியுள்ளது.

பேச்சுவார்த்தை தோல்வி

மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வாரை சந்தித்து இது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகள் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

25 கோடி அரசு ஊழியர்கள் பங்கேற்பு

இதில் சிஐடியூ, ஐ.என்.டி.யூ.சி உள்ளிட்ட 10 மத்திய வர்த்தக தொழிற்சங்கங்களும், பல்வேறு தொழிற்சங்க கூட்டமைப்புகளும் பங்கேற்றுள்ளன. இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த சுமார் 25 கோடி பேர் பங்கேற்றுள்ளனர்.

தேர்வுகள் ஒத்திவைப்பு

ஒடிசா மாநிலம் உத்கல் பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஐ.சி.ஏ.ஆர், நெட் ஆகிய தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் யு.பி.டெட் 2019 மற்றும் ஜே.இ.இ மெயின் 2020 தேர்வுகள் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வர்த்தகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் இழப்பீடு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இன்று நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நாட்டின் எந்தப் பகுதியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் பொது போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இது மெட்ரோ நகரங்களை பெரிதும் பாதிக்கும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here