குரூப் 4 தேர்வில் முறைகேடா – டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு

0
TNPSC

கடந்த 2019 செப்டம்பர் 1 அன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.  அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கங்கள் பின்வருமாறு,

அண்மையில் நடந்து முடிந்த தொகுதி 4 க்கான தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய இதர மாவட்டங்களை சார்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகப்படியான எண்ணிக்கையில் முதல் 100 தரவரிசைக்குள் வந்ததாக புகார் எழுந்துள்ளது.

     1.  இராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வட்டங்களில் 128 தேர்வு மையங்களில் 32879 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெற்றது.  இதிலிருந்து 497 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை வட்டங்களில் பல்வேறு தேர்வுக்கூடங்களில் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களின் விபரங்கள் பின்வருமாறு,

வ.எண் இராமேஸ்வரம் மொத்த விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதிய இதர மாவட்டத்தினர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தெரிவு செய்யப்பட்ட இதர மாவட்டத்தினர்
001 St. Joseph Hr. Sec. School 300 30 9 7
002 Sri Parvathavarthani amman Girls HSS (North Building) 260 23 3 2
003 National Matriculation HSS (North Building) 300 24 3 1
004 National Matriculation HSS (South Building) 300 27 10 8
005 Udhayam Polytechnic College 300 20 8 5
006 Holi Cross Girls HSS 249 25 4 4
  கீழக்கரை        
001 St. Joseph Hr. Sec. School 300 32 9 7
002 Caussanel College of Arts and Science College 420 39 6 4
003 Caussanel College of Arts and Science College 411 42 5 2
    2840 262 57 40

     2.  மேற்கூறிய 40 விண்ணப்பதாரர்களும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

     3.  மேற்கூறிய விண்ணப்பதாரர்கள் இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையைச் சேர்ந்த வெவேறு மையங்களில் வெவேறு அறைகளில் தேர்வு எழுதியுள்ளனர்.  எனவே பல்வேறு செய்திகளில் தெரிவித்துள்ளது போல் இந்த 57 நபர்களும் ஒரே அறையில் இருந்தோ அல்லது ஒரே தேர்வுக்கூடத்தில் இருந்தோ தெரிவு செய்யப்படவில்லை.

     4.  மேலும் இம்மையங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களில் ஒட்டுமொத்த தரவரிசை அடிப்படையில் முதல் 1000 இடங்களில் 40 நபர்களும், முதல் 100 இடங்களில் 35 நபர்களும் உள்ளனர்.

     5.  இந்த குற்றச்சாட்டு குறித்து மேற்கூறிய விண்ணப்பதாரர்களின் விடைத்தாள்கள், ஆவணங்கள் மட்டுமின்றி இத்தேர்வுடன் தொடர்புடைய பிற ஆவணங்கள் அனைத்தும் மிகுந்த கவனமுடன் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து எவ்வித பாரபட்சமுமின்றி மேலும் விசாரணை செய்யப்பட்டு விரைவில் உண்மை நிலை அறிவிக்கப்படும்.  இவ்விசாரணையில் தவறு ஏதும் கண்டறியப்பட்டால் அதற்கு காரணமான நபர்கள் மீது சட்டப்படி மிகக்கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும்.  எனவே தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை கொண்டு அமைதி காக்குமாறு தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here