‘கேரி பேக்கு’க்கு பணம் வசூலிக்க தடை – தேசிய நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு!!

0

இனி கடைகள் மற்றும் மால்களில் நுகர்வோருக்கு அளிக்கப்படும் கேரி பேக்களுக்கு பணம் வசூலிக்க கூடாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது தேசிய நுகர்வோர் ஆணையம். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

கேரி பேக்:

தற்போதைய காலங்களில் இயற்கைக்கு எதிரான பல செயல்களை நாம் செய்து வருகிறோம். அதில் ஒன்று தான் பிளாஸ்டிக் பயன்பாடு. பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் அதனால் ஏற்படுத்தும் விளைவுகளை மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் இந்த பிளாஸ்டிக் நடமாட்டம் மக்களிடத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது.

மேலும் தற்போது கடைகள் மால்களில் மக்கள் வாங்கும் பொருட்களை வைத்து செல்வதற்காக கேரி பேக் குடுக்கப்படுகின்றனர். ஆனால் இதற்கும் சேர்த்து காசு வாங்கி வருகின்றனர் மால்களின் உரிமையாளர்கள். மேலும் இந்த கேரி பேக்கிற்கு பில் எதுவும் கொடுப்பதில்லை. இந்த சம்பவாம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதனை தடுக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் இந்த சட்டம் பிறப்பிப்பதற்கு காரணம், ‘டெல்லியை சேர்ந்த ஒருவர் மாவட்ட குறைதீர் மன்றத்தில் ஓர் புகாரை தெரிவித்தார், அதில் அவர் கூறியதாவது, ‘ஓர் தனியார் மாலில் கேரி பேக்கிற்காக ரூ.18 வசூலிக்கப்பட்டுள்ளது மேலும் இதற்கான பில் எதுவும் அந்த மாலில் தரப்படவில்லை. இதனால் இந்த கேரி பேக் தரமானதா என்பதை எப்படி அறியமுடியும், மேலும் தயாரிப்பு நிறுவனம் போன்ற விவரங்களையும் அறிய வாய்ப்பில்லை என்று புகார் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த வழக்கு மாவட்டம் தாண்டி தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் வரை சென்றுள்ளது. இதற்கு தற்போது தேசிய நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் தினேஷ் குமார் ஓர் தீர்ப்பு வழங்கியுள்ளார். அவர் கூறியதாவது, நுகர்வோரிடம் கேரி பேக்கிற்கு பணம் வசூலிக்கக்கூடாது, இல்லையெனில் கேரி பேக் எந்த தரத்தில் உள்ளது என்பதையும் அதற்கான விலை மற்றும் அதன் தயாரிப்பு நிறுவனத்தின் விவரங்களையும் ஓர் அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்கப்படவேண்டும், கேரி பேக்கின் தரத்தை அறிவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு , என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here