பிக் பாஸ் புகழ் அனிதா சம்பத்தின் தந்தை திடீர் மரணம் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

0

பிக் பாஸ் புகழ் அனிதா சம்பத்தின் தந்தை மற்றும் பத்திரிகையாளரான ஆர். சி. சம்பத் இன்று மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தியினை அவரது மகளான அனிதா தனது இன்ஸ்டாகிராம் வாயிலாக உறுதி செய்துள்ளார்.

பிக் பாஸ் அனிதா:

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் செய்தியாளராக இருந்தவர் அனிதா சம்பத். அனிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பிக் பாஸ் 4” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் அனைவராலும் விரும்பப்பட்டாலும், நாட்கள் ஆக ஆக அவர் அதிகமாக பேசி அனைவரையும் எரிச்சல் அடைய வைத்தார். இதன் காரணமாக இந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்றதால் அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் மிகவும் மகிழ்ச்சியாக தனது குடும்பத்தினை பார்க்க போகிறேன் என்று இருந்தார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த நிலையில் அவரது தந்தை ஆர்.சி சம்பத் தனது மகனுடன் சீரடி சென்றுள்ளார். அவரது வயதின் மூப்பு காரணமாக இன்று அவர் மரணம் அடைந்துள்ளார். இது அவரது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியாக இருந்துள்ளது. அனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததிலிருந்து தனது தந்தையை பார்க்கவில்லை என்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது, “எனது தந்தை இறந்துள்ளார் என்பது எனக்கு இன்றும் பேரதிர்ச்சியாக உள்ளது. இன்று காலை 8 மணிக்கு இந்த செய்தியினை நான் கேட்டேன். எனக்கு அவரது குரலை கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவரை நான் தொலைபேசி வாயிலாக கூட தொடர்பு கொள்ளவில்லை. நான் கடைசியாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக 14 நாட்கள் தனிமைபடுத்துதலில் இருந்த போது அவரை பார்த்தது”

5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

“அவரது உடல் நாளை சென்னை வந்தடையும் என்று கூறப்பட்டுள்ளது. அவர் இல்லை என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை” இவ்வாறாக தெரிவித்துள்ளார். அவரது தந்தைக்கு அல்சர் இருந்தது என்றும் அவர் கடந்த 2 நாட்கள் எதுவும் உட்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது யார்க்கும் தெரியாது என்றும் பெற்றோர்களை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here