தனியார் நிறுவனங்களின் 3 மாத ஊதியத்தை அரசே வழங்கும் – கனடா பிரதமரின் அசத்தல் அறிவிப்பு..!

0

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் காரணத்தால் கனடாவில் தொழில்கள் பாதிப்படைவதை தொடர்ந்து நிறுவனங்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதியத்திற்கான மானியத்தை வழங்க கனடா பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

ஊதியத்திற்கான மானியம்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் கனடாவில் தொழில்கள் மந்தநிலைமையை அடைந்துள்ளது. இந்த பிரச்சனைக்காக எந்த பணியாளர்களையும் பணி நீக்கம் செய்து விட கூடாது என்பதற்காக அடுத்த 3 மாதங்களுக்கான ஊதியத்திற்கான மானியங்களை அரசு வழங்கும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த வைரஸ் பாதிப்பினால் பல்வேறு நிறுவனங்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் சில நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சம்பளம் கூட தரமுடியாத நிலையில் உள்ளது. இதன் மூலம் பணியிழப்பு ஏற்பட்டு பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் நிலைமையும் உருவாகி உள்ளது.

சிறு நிறுவனங்களுக்கு மானியம்:

இதனால் சிறு தொழில் செய்பவர்களுக்கு ஊதியத்திற்கான மானியத்தை அரசு வழங்கும். அதன் மூலம் பணியாளர்களுக்கு தேவையான ஊதியத்தை நிறுவனங்களால் வழங்க முடியும். விவசாயிகளுக்கும் அதே போன்று 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்படும். மேலும் வேலை பறிபோய்விடுமோ என்று அச்சப்படாமல் தங்களின் உடல்நலத்தை பார்த்துக்கொண்டாலே போதும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here