தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – பிப்ரவரி 13இல் தொடக்கம்!!

0

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி, தமிழகத்தில் வரும் பிப்ரவரி 13ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது என அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.

அமைச்சரவை கூட்டம்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் அல்லது மே மாத துவக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் மாத துவக்கத்தில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பாஜவுடனும், திமுக காங்கிரஸ் உடனும் கூட்டணியில் போட்டியிடவுள்ளனர். நேற்று சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த வேலைகளை பார்வையிடுவதற்காக இந்திய தேர்தல் ஆணைய தலைவர் நேற்று தமிழகத்திற்கு வருகை புரிந்தார்.

‘பிளாக் காபி’ குடித்தால் இதயநோய், புற்றுநோயை வராமல் தடுக்கலாம்’ – ஆராய்ச்சியாளர்கள் தகவல்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தேர்தல் வாக்குப்பதிவுகளை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அனைத்து கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணைய தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் அமைச்சரவை கூட்டம் வரும் சனிக்கிழமை பிப்ரவரி 13ம் தேதி நடக்கவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையின் கீழ் நடக்கவுள்ள அமைச்சரவை கூட்டத்தில், இடைக்கால நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here