3 ஆண்டுக்கு பிறகு டாப் 5 யில் நுழைந்த பி.வி சிந்து…, மற்ற இந்திய வீரர்களின் இடம்??

0

உலக பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கனையான பி.வி சிந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாப் 5 யில் நுழைந்துள்ளார்.

பேட்மிண்டன் தரவரிசை:

பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு (BWF), பேட்மிண்டனில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இரு முறை இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் (ரியோ, டோக்கியோ) பதக்கம் வென்ற பி.வி சிந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாப் 5 யில் நுழைந்துள்ளார். இவர், கடந்த மே மாதம் வெளியிட்ட தரவரிசையில் 7 வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர், இந்த ஆண்டில், பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், ஒற்றையர் பிரிவில் தங்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தி இருந்தார். இதனை தொடர்ந்து, ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கமும் வென்றிருந்தார். இதன் மூலம், ஸ்பெயினின் கரோலினா மரினை பின்னுக்கு தள்ளி 5 வது இடத்தை பி.வி சிந்து தட்டி சென்றார். இவர், டிசம்பர் மாதம் BWF வேர்ல்ட் டூர் பைனல்ஸில் பதக்கம் வெல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதி போட்டிக்குள் நுழையுமா இந்தியா?? ஜப்பானுக்கு எதிராக களமிறங்கும் இளம் படை!!

ஒரு காலத்தில் நம்பர் 1 என்ற இடத்தை எட்டி ஒரே இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருந்த சாய்னா நேவால் தற்போது 33 வது இடத்தில் உள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக தனது பார்மை மீட்டெடுப்பதற்காக போராடி வருகிறார். ஆடவருக்கான தரவரிசையில், இந்தியாவின் லக்ஷ்யா சென் மற்றும் எச்.எஸ். பிரணாய் 8 மற்றும் 12 வது இடத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here