தேவையான பொருட்கள்
Egg Bhejo – முட்டை, புளி தண்ணீர், உப்பு கலந்த நீர், வெங்காயம், எலுமிச்சை, பூண்டு , காய்ந்த மிளகாய், எண்ணெய் தேவையான அளவு.
Egg Bhejo செய்முறை
முதலில் முட்டையை வேகவைத்து எடுத்து கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொடியாக நறுக்கி காய்ந்த எண்ணையில் போட்டு மொறுமொறுப்பாக வதக்கி எடுக்கவும் பின்பு அதே எண்ணையில் பூண்டை பொன்னிறமாக வதக்கி எடுத்துக்கொள்ளவும். அதன் பின் காய்ந்த மிளகாயையும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பின்பு அந்த மிளகாயை இடித்து வைத்து கொள்ளவும். பிறகு வேகவைத்த முட்டையை கீறவும்.
அதில் பொறித்த வெங்காயத்தை சிறிது வைக்கவும். அதன்பின் பொரித்து இடித்து வைத்த மிளகாவை சேர்க்கவும். அதன் பின் புளி தண்ணீரை சிறிது சேர்த்து ஒன்றன்பின் ஒன்றாக எலுமிச்சை சாறு, உப்பு கலந்த தண்ணீர், எண்ணெய் ஆகிவற்றை சேர்ந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும். குழந்தைகளுக்கு இதே போல் செய்து தருவதால் அவர்கள் விரும்பி சாப்பிடுவர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |