சீனாவில் பரவும் புபோனிக் பிளேக் தொற்றுநோய் – ஒரு கிராமத்திற்கே சீல்!!

0

சீனாவில் இருந்து பரவி உலக நாடுகளில் உயிர்பலி வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் தற்போது புபோனிக் பிளேக் எனும் தொற்றுநோய் சீனாவின் உள் மங்கோலியாவில் பரவத் தொடங்கி உள்ளது. இந்த சம்பவம் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

புபோனிக் பிளேக் தொற்று:

சீன வரலாற்றில் மிகவும் ஆபத்தான தொற்று நோயான புபோனிக் பிளேக் மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. இது பல நூற்றாண்டுகள் பழமையான நோயாகும். உள் மங்கோலியாவில் உள்ள அதிகாரிகள் ஒரு கிராமத்தை சீல் வைத்துள்ளனர், அங்கு வசிப்பவர் புபோனிக் பிளேக் நோயால் உயிரிழந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த மரணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாடோ நகரில் சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்டவர் வியாழக்கிழமை ஒரு புபோனிக் பிளேக் நோயாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பாடோ நகராட்சி சுகாதார ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது. நோயாளி இரத்த ஓட்ட அமைப்பில் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்து உள்ளார். இருப்பினும் அவருக்கு எவ்வாறு புபோனிக் பிளேக் தொற்று ஏற்பட்டது என இன்னும் கண்டறியப்படவில்லை.

plague
plague

நோய் பரவுவதைத் தடுக்க, இறந்த நோயாளி வாழ்ந்த சுஜி சின்குன் கிராமத்தை அதிகாரிகள் சீல் வைத்து, வீடுகளை தினமும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய உத்தரவிட்டனர். அனைத்து கிராமவாசிகளும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கிராமம் அமைந்துள்ள மாவட்டமான டமாவோ பேனர், பிளேக் தடுப்புக்கான நிலை 3 ஆம் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது.

வீட்டில் சென்று கஞ்சா டெலிவரி – விற்பனையில் இது ” தினுசு” !!

பிளேக், பாக்டீரியாவால் ஏற்படுகிறது மற்றும் பிளே கடித்தல் மற்றும் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூலம் பரவுகிறது, இடைக்காலத்தில் நடந்த கருப்பு மரண (Black Death) தொற்றுநோய்களின் போது ஐரோப்பாவில் சுமார் 50 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர். பிளேக்கின் மூன்று வடிவங்களில் ஒன்றான புபோனிக் பிளேக், வலி, வீங்கிய நிணநீர், அத்துடன் காய்ச்சல், சளி மற்றும் இருமலை ஏற்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here