கடல் நாயகனாக அசத்தும் யோகி பாபு.., புதிய படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு.., எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
கடல் நாயகனாக அசத்தும் யோகி பாபு.., புதிய படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு.., எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி  நடிகர்களில் ஒருவராக இருந்து  வருபவர் தான் யோகி பாபு. தற்போது ஹீரோவாகவும் நடிக்க தொடங்கிவிட்டார். அப்படி அவர் ஹீரோவாக நடித்த மண்டேலா, கூர்கா, கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு போட் என பெயர் சூட்டப்பட்ட நிலையில் யோகி பாபுவுடன் இணைந்து கௌரி ஜி கிஷன், மது மகேஷ்,ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தை குறித்து படக்குழு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது யோகி பாபு நடிக்கும் போட் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் முழுக்க முழுக்க கடலை சார்ந்து இருப்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here