அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை பாதிப்பு..! தொற்று நோயாக அறிவிக்க மத்திய அரசு வலியுறுத்தல்..!

0

இந்தியாவில் பரவி வரும் கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்று நோய் பட்டியலில் அறிவிக்க வேண்டும் எனவும் மற்றும் அனைத்து மாநிலங்களும் அந்நோயை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைளை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாக்க மாநிலங்கள் சிறந்த முயற்சிகள் எடுத்தாலும், தற்போது, மியூகோமிகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை தொற்று மற்றொரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த பூஞ்சையானது ஒரு குழுவாக இணைந்த அச்சு வடிவில் உருவாகக்கூடியது. கோவிட் -19 பாதிப்பிலிருந்து குணமடைபவர்கள் அல்லது குணமடைந்தவர்களிடம் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வகையில் கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தரகண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  அண்மை செய்திகளின்படி தமிழ்நாட்டிலும் இந்நோய் பரவல் ஆரம்பமாகியுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு இந்த பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகாதார அமைச்சகம்,  மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தொற்று நோய்கள் சட்டம் 1897 இன் கீழ் கருப்பு பூஞ்சை பாதிப்பும் தொற்று நோய் தான். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்  வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here