கொரோனாவை போல் இந்தியாவில் ஆதிக்கத்தை செலுத்தும் கருப்பு பூஞ்சை – பாதிப்பு எண்ணிக்கை 11,717 ஆக உயர்வு!!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடிவுக்கு வராத நிலையில் புதிய வகையாக கருப்பு பூஞ்சை நோய் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கருப்பு பூஞ்சை:

இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்றினை தவிர்த்து மற்ற கொடிய வகை நோய் மக்களிடையே மிக அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. முதலில் கருப்பு பூஞ்சை நோய் மட்டும் கண்டறியப்பட்டு வந்த நிலையில் தற்போது இதனை தொடர்ந்து வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை நோயும் கண்டறியப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் நாட்டில் உள்ள மக்கள் கடுமையான அச்சத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் மக்கள் அனைவரும் கருப்பு பூஞ்சை வகை நோய் பற்றி கவலை படவேண்டாம் என்றும் இந்த வகை நோய் முந்தைய காலத்தில் இருந்தே இருக்கிறது என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுத்திய பாதிப்பு குறித்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட பிக் பாஸ் பிரபலம் – வைரலாகும் புகைப்படம்!!

அதன்படி இந்தியாவில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயினால் 11,717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் மட்டும் சுமார் 236 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுபவர்களை அதிக அளவில் தாக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here