என்னப்பா ரக்ஷன் நீயா இது??லைக்ஸுகளை அள்ளும் குழந்தை பருவ புகைப்படம்!!

0

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராக இருந்து வருகிறார் ரக்ஷன். இதுவரை யாரும் பார்த்திடாத ரக்ஷனின் குழந்தை பருவ புகைப்படம் தற்போது இணையத்தில் ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது.

ரக்ஷன்:

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தான் ரக்ஷன். கலக்க போவது யாரு என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரக்ஷன் நிகழ்ச்சியில் செய்த டைமிங் காமெடி மூலம் மக்கள் அனைவராலும் கவரப்பட்டார். மேலும் அதனை தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்னும் திரைப்படத்தில் துல்கர் சல்மானின் நண்பராக நடித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

rakshan

இந்த படத்தின் மூலம் இவரது நடிப்பு திறமை அனைவராலும் கவரப்பட்டது. அதன்பின்பு இவர் கடைசியாக குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அனைவருக்காகவும் ஓடி ஓடி உதவி செய்து மக்களால் கவரப்பட்டார். கோமாளிகள் போல் இவருக்கும் அந்த நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு உண்டு என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் ஓர் ரியாலிட்டி ஷோ என்றால் அதற்கு தொகுப்பாளரின் பங்களிப்பு மிகவும் அவசியம்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

rakshan

விருது வேட்டை நடத்தும் குக் வித் கோமாளி அஸ்வின் – வேற லெவல் போங்க!!

இந்நிலையில் சமீப நாட்களாக திரை பிரபலங்களின் அரிய புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. தற்போது அந்த வகையில் ரக்ஷனின் குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தில் ரக்ஷனுடன் அவருடைய சகோதரியும் உள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை பதிவிட்ட ரக்ஷன் டாம் & ஜெரி என்று கேப்சனை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் பல லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here