மீண்டும் பில்லாவாக ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கும் அஜித் – இனிமேல் மரணமாஸ் தான்.., கொண்டாடும் ரசிகர்கள்!!

0
மீண்டும் பில்லாவாக ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கும் அஜித் - இனிமேல் மரணமாஸ் தான்.., கொண்டாடும் ரசிகர்கள்!!
மீண்டும் பில்லாவாக ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கும் அஜித் - இனிமேல் மரணமாஸ் தான்.., கொண்டாடும் ரசிகர்கள்!!

நடிகர் அஜித் குமார் நடித்த பில்லா திரைப்படத்தை இயக்கிய விஷ்ணுவர்தனுடன் மீண்டும் கை கோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார்:

வெள்ளித்திரையில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் தான் நடிகர் அஜித்குமார். ஆரம்பத்தில் படங்கள் நன்றாக போகவில்லை என்றாலும் சில படங்கள் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அந்த வகையில் இவர் நடித்த வாலி, சிட்டிசன், தீனா போன்ற திரைப்படங்கள் அடங்கும். குறிப்பாக முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தீனா திரைப்படம் மூலம் தல என்று ரசிகர்களிடையே பிரபலமானார்.

அன்றிலிருந்து இன்று வரை ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். அதனை தொடர்ந்து குறிப்பிட்ட காலத்தில் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில், பில்லா என்ற திரைப்படத்தில் கேங்ஸ்டராக நடித்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கி கொண்டார். இந்நிலையில் நடிகர் அஜித்குமார் பில்லா திரைப்படத்தை இயக்கிய விஷ்ணுவர்தனுடன் மீண்டும் கை கோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் உருவான மற்றொரு திரைப்படம் ஆரம்பம். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் மீண்டும் அஜித்துடன் இணைய வேண்டும் என்று நினைத்து அவருக்காகவே ஒரு கதையை எழுதியுள்ளார் விஷ்ணுவர்தன். இந்த கதையை அஜித்திடம் கூட அவரும் ஓகே சொல்லியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் வினோத் இயக்கத்தில் ஏகே 61-இல் நடித்து வருகிற அஜித் பல மாற்றங்களை செய்ய அறிவுறுத்தி வருகிறார். மேலும் ஒரே மாதிரி தொடர்ந்து வினோத் இயக்கத்தில் நடித்து வருவதால் தற்போது அஜித் தானாகவே முன் வந்து விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். இந்த தகவலால் ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆடி போயுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here