ஐடி ஊழியர்களுக்கு எச்சரிக்கை – தனியார் நிறுவனங்களுக்கு எழுந்த மிகப்பெரிய சிக்கல்! மீள்வது கடினம் தான்!!

0
ஐடி ஊழியர்களுக்கு எச்சரிக்கை - தனியார் நிறுவனங்களுக்கு எழுந்த மிகப்பெரிய சிக்கல்! மீள்வது கடினம் தான்!!

இந்திய ஐடி நிறுவனங்களுக்கு, ஒரு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளதால் ஐடி ஊழியர்களுக்கு இனி வரும் காலம் கடுமையாக மாறும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஐடி ஊழியர்கள்:

இந்தியா முழுவதும் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில், லட்சக்கணக்கில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு ஊதிய உயர்வு, பணி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுத்து வருகிறது. ஆனால் சமீப தினங்களாக, உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக பல ஐடி நிறுவனங்கள் தங்கள் பங்குகளை குறைக்க தொடங்கியுள்ளனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

குறிப்பாக ரெசசன் அச்சம் காரணமாக பல அமெரிக்க நிறுவனங்கள் செலவு குறைப்பில் இறங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக இந்திய ஐடி நிறுவனங்கள், தங்கள் மதிப்பை இழந்து வருகின்றனர். அமெரிக்காவின் இந்த ரெசசன் அச்சத்தால் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் ஊழியர் குறைப்பு, ஊதியம் குறைப்பு போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

இந்திய ஐடி துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் இந்த பாதிப்பு, அடுத்த ஆண்டு வரை இருக்கலாம் என்றும் அதிலிருந்து மீள்வது சற்று கடினம் தான் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த எச்சரிக்கையால், ஐடி ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here