அடக்கடவுளே!! தங்கத்தை தவற விட்ட தீபக் புனியா.., காயத்தால் ஏற்பட்ட இழப்பு!!

0
அடக்கடவுளே!! தங்கத்தை தவற விட்ட தீபக் புனியா.., காயத்தால் ஏற்பட்ட இழப்பு!!
அடக்கடவுளே!! தங்கத்தை தவற விட்ட தீபக் புனியா.., காயத்தால் ஏற்பட்ட இழப்பு!!

கடந்த மாதம் பர்மிங்காமில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தீபக் புனியா உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை சில காரணங்களால் தவறவிட்டுள்ளார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்!!

பர்மிங்காம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தீபக் புனியா முழங்கை காயம் காரணமாக பெல்கிரேடில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகியுள்ளார். கடந்த 2019 உலக சாம்பியன்ஷிப் 86 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவருக்கு அமெரிக்காவின் மிச்சிகனில் மல்யுத்த பயிற்சியின் போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) தீபக் புனியாவுக்கு ஒரு சோதனையை நடத்தியது. இந்த சோதனையில் தேர்வர்கள் நிர்ணயித்த எடையை தூக்க முடியவில்லை. இதனால் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் போட்டிக்கான வாய்ப்பை தவற விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு பதில் 86 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​பிரிவில் சஞ்சீத்தை தேர்வு செய்ததாக WFI உதவி செயலாளர் வினோத் தோமர் தெரிவித்தார்.

தீபக் புனியா இதற்கு முன்னர் நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில் பல பதக்கங்கள் வென்றுள்ளார். அதன்படி கடந்த 2019 இல் எஸ்டோனியாவின் தாலின் நகரில் நடந்த உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கமும், 2018 ஆம் ஆண்டு புது தில்லியில் நடந்த ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here